இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வேறெந்த கோவில்களிலும் நடக்காத அதிசய நிகழ்வு இங்கு நடக்கிறது... அவ்வாறு அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஆச்சரியங்கள் அல்லவா?
சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். இவர் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அழகுறக் காட்சி தருவது மிகச் சிறப்பாகும்.
ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் வழியாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடமாகும்.
இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர் 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்தார்.
பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டுகிறார். நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் பெருமாள் காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக