இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நம் முன்னோர்களால் அக்காலத்தில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம்
இருந்துகொண்டே தான் இருக்கிறது.
அதிசயம் என்றால் அதை பார்க்கத் தான் அனைவரும் விரும்புவார்கள். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. அந்த நந்தியில் என்ன சிறப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில். ஏறத்தாழ 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டுள்ள இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.
நந்தியின் வாயில் தொடர்ந்து வழியும் நீர் :
பொதுவாக எல்லா கோவில்களிலும் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது.
நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
தீராத நோய்களைத் தீர்க்கும் தீர்த்தம் :
இந்த நந்தியின் வாயிலிருந்து வரும் நீரை தீர்த்தமாகவும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவனுக்கு அபிஷேகம் செய்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக