இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பார்ச்சுவ
என்றால் 'ஒரு பக்கம்' அல்லது 'பக்கவாட்டு' என்று பொருள். இந்த ஆசனம் உடலின் வலது
மற்றும் இடது பக்கவாட்டு பகுதியை நன்கு நீட்சியடைய செய்வதால் இதற்கு பார்ச்சுவ
கோணாசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் நேராக நிற்கவும். (மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்க வேண்டும்.)
- பின்னர் இரு கால்களையும் மூன்று அடி தூரத்திற்கு அகட்டி வைக்கவும்.
- இதே நிலையில் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டவும்.
- பின்னர் வலது பாதத்தை வெளிப்பக்கமாக திருப்பி, வலது முழங்காலை மடிக்கவும்.
- உடலை வலதுபுறம் கொண்டு சென்று வலது உள்ளங்கையை பாதத்தின் அருகில் தரையில் வைக்கவும்.
- இதே நிலையில் இடது கையை தலைக்கு மேல் தரைக்கு இணையாக கொண்டு வரவும். கண் பார்வையானது முன்னோக்கி இருக்கவும்.
- இதே நிலையில் ஐந்து இயல்பான சுவாசங்கள் செய்து பின், மூச்சை உள் இழுத்துக்கொண்டே நேராக நிமிர்ந்து நிற்கவும்.
- மேலே செய்தது போல மூச்சை வெளிவிட்டுக்கொண்டே இடது பக்கமும் செய்யவும்.
பலன்கள்:
- முதுகுவலி நீங்க இது மிகச்சிறந்த ஆசனம்.
- குடல் பகுதியின் இயக்கங்கள் சீராகும்.
- இடுப்பு பகுதியை சுற்றியுள்ள அதிகப்படியான சதையை குறைகிறது.
- கணுக்கால், முழங்கால் மற்றும் தொடைகள் வலுப்பெறுகிறது.
- மார்புப்பகுதி நன்றாக விரிவடைகிறது.
- மலச்சிக்கல் பிரச்சனைகள் அகலும்.
- கால் பகுதியில் உள்ள அனைத்து மூட்டுகளும் வலிமை பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக