இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஊட்டியிலிருந்து ஏறத்தாழ 22கி.மீ தொலைவிலும், குன்னூரிலிருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும், கோயம்புத்தூரிலிருந்து ஏறத்தாழ 69கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு எழில் மிகுந்த இடம் தான் சிம்ஸ் பூங்கா.
சிறப்புகள் :
சிம்ஸ் பூங்கா என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியில், குன்னூரில் உள்ள ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும்.
ரம்மியமான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா பன்னிரண்டு ஹெக்டேர் பரப்பளவில் மிகவும் பிரம்மிப்பாக அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது.
பூங்காவின் உள்ளே பார்க்கும் இடங்கள் எல்லாம் அழகான மரங்கள், வண்ணமயமான மலர்கள், புல்வெளிகள், புதர்கள், கொடிகள் போன்ற பல்வேறு தாவரங்களை கொண்டுள்ளது.
இந்தப் பூங்காவில் ருத்ராட்ச மரம், தாளிசபத்திரி, குயின்ஸ்லாந்து கரி, பைன், ஹாண்ட்சம் ஆர்னமெண்டல் மரம் போன்ற அரிய மதிப்புமிக்க மரங்களும், அரயுகரியா, கருவாலி மரம், பீனிக்ஸ், மக்னோலியா, பைன், மர எண்ணெய், பெர்ன்ஸ் மரம், கமீல்லா போன்ற நயத்தகு மரங்களும் இங்கு உள்ளன.
இந்த பூங்கா சரிவுகளோடும் அதன் மீது நடைபாதைகளைக் கொண்டும் மிகவும் தனித்துவமான அழகு கொண்டதாக உள்ளது. இதில் நடந்து செல்லும் போது இரு புறங்களிலும் நன்றாக பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், பல்வேறு விதமான அழகிய பெரிய வண்ண வண்ண பூக்கள் பூக்கும் தாவரங்களும் கண்களுக்கு விருந்தாகின்றன.
குன்னூரின் குளிர்ச்சியான காலநிலையில் செழித்து வளரும் இம்மரங்கள் ஆண்டுமுழுவதும் ரசிக்கத்தக்க அழகுடன் காணப்படுகின்றன.
ஆண்டுதோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக உள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்கா.
எப்படி செல்வது?
குன்னூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
குன்னூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டியவை :
பழக்காட்சி
பல வகையான அதிசய மலர்கள்
பல வகையான தாவரங்கள் மற்றும் மரங்கள்
இதர சுற்றுலாத்தலங்கள் :
பைக்காரா அருவி
தொட்டபெட்டா காட்சி முனை
நீலகிரி மலை
கேத்தரின் அருவி
லேம்ப் பாறை
துரூக் கோட்டை
டால்பின் மூக்கு
குவன்சே தேயிலை தொழிற்சாலை
கட்டாரி அருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக