இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உலகில் சிலைகளாக அதிகம் வைக்கப்பட்ட மனிதர் புத்தர் தான். விதவிதமாக பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றிற்கெல்லாம் சிகரம் தொட்டதுபோல ஒரு சிலை சீனாவில் இருக்கிறது. அச்சிலைதான் உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையாகும். இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்கப்பட்டது.
சீனாவின் தெற்குப் பகுதியான லெசான் நகரத்தின் பிரமாண்ட மலையை குடைந்து இந்த பிரமாண்ட புத்தர் சிலையை உருவாக்கிருக்கிறார்கள். இந்த சிலை 233 அடி உயரமும், 92 அடி அகலமும் கொண்டது. The Leshan Gaint Buddha என்று அழைக்கப்படும் இச்சிலையை உலகின் பாரம்பரியச் சின்னமாக 1996ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.
இச்சிலை உருவாக்கிய பின் ஏற்பட்ட ஆச்சரியம்.....
புத்தர் சிலை அமைந்திருக்கும் லெசான் மலைப் பகுதியைச் சுற்றி 'மின்சியாங்" என்ற ஆறு ஓடுகிறது. தற்போது அமைதியாக ஓடும் இந்த ஆறு கி.பி. 7-ம் நூற்றாண்டில் அதிக சப்தத்துடன், அதிகமான இழுப்பு சக்தியுடன் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ஆற்றைக் கடப்பதும், படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவதும் அப்பகுதி மக்களுக்கு சவாலாக இருந்தது.
அதனால் அப்பகுதி மக்கள், 'ஹை டாங்" என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அந்தத் துறவி, ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொன்னார். மக்களும், சிலை வடிப்பதற்காக பணியைத் தொடங்கினர்.
கி.பி.713-ல் தொடங்கிய இந்தப் பணி, வெகுவிரைவாக நடைபெற்றது. புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில், அந்த துறவி இறந்து போனார். அதனால் சிலை வடிப்பு பணிகளில் தடை ஏற்பட்டு நின்றே போனது. ஆனால் மின்சியாங் ஆற்றின் ஆக்ரோஷம் மட்டும் நிற்க வில்லை.
சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர், லெசான் நகரை பார்வையிட வந்த அந்தப் பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர் சிலையைப் பற்றி அறிந்த பிறகு, அவரது முயற்சியால் கி.பி.803-ல் புத்தர் சிலை முழு வடிவம் பெற்றது. இதில் ஆச்சரியமிக்க விஷயம் என்னவென்றால், சிலை முழுமைப் பெற்றதுமே.. ஆக்ரோஷமான மின்சியாங் ஆறு அமைதியின் மறு உருவாக மாறிவிட்டதாம்.
சிலையின் அமைப்பு :
இந்த புத்தர் சிலையின் தலையில் 1,021 சுருள் முடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் மரத்தால் ஆனது. இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம். இதற்காக மட்டும் சுமார் 1,000 பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்த புத்தர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை புத்தரை ரசித்தபடியே செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக