இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திரிகோணம் என்றால் 'மூன்று கோணம்'
என்று பொருள். அதாவது இந்த ஆசனத்தின் இறுதி கட்டத்தில் உடலில் மூன்று கோணங்கள்
தெரிவதால் இதற்கு திரிகோணாசனம் என்று பெயர்.
செய்முறை:
- முதலில் மேலே கூறியவாறு தாடாசன நிலையில் நிற்கவும்.
- கால்கள் இரண்டையும் மூன்று அடிவரை அகட்டி வைத்துக்கொள்ளவும்.
- பின்னர், மூச்சை நன்றாக உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் தோள்பட்டைக்கு இணையாக பக்கவாட்டில் தூக்கவும். இந்த நிலையில் கைகள் வளையாமல் பார்த்துக்கொள்ளவும்.
- பின் மூச்சை வெளிவிட்டபடி உடலை வலதுபுறம் வளைக்கவும். வலது கையால் வலது பாதத்துக்கு வெளியே தொட முயற்சி செய்யவும்.
- பிறகு தலையை மேல்நோக்கி திருப்பி, இடது உள்ளங்கையை பார்க்கவும்.
- அதாவது இரண்டு கைகளும் வளையாமல் ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இந்த நிலையில், சுமார் ஐந்து சுவாசங்கள் அல்லது 20 வினாடிகள் இருக்க வேண்டும்.
- பின் மூச்சை உள்ளிழுத்தவாறு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
- இதே போன்று இடது பக்கமும் உடலை பக்கவாட்டில் வளைத்து செய்ய வேண்டும்.
பலன்கள்:
- மேலே கூறிய கோணாசனத்தில் கிடைக்கும் பழங்கள் அனைத்தும் திரிகோணாசனத்தில் கிடைக்கும்.
- இடுப்புவலி, முதுகுவலி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
- மலச்சிக்கல் பிரச்சனை அகலும்.
- சிறுநீரகம் நன்கு செயல்படும்.
- முழங்கால் மற்றும் தொடை பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும்.
- மார்பு பகுதி நன்றாக விரிவடைகிறது.
- இடுப்பு பகுதியை சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடலுக்கு அழகு சேர்க்கிறது.
- உடல் எடையும் குறைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக