இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மெலிதானவர்களையும் குண்டாக்கும் ஆலுமட்டர்
தேவையான பொருள்கள்:
- உருளைக் கிழங்கு 4
- பெரிய வெங்காயம் 4
- பச்சைப் பட்டாணி அரை ஆழாக்கு
- பச்சை மிளகாய் 4
- தக்காளிப் பழம் 4
- கரம் மசாலாப் பவுடர் இரண்டு சிட்டிகை
- உப்பு தேவையான அளவு
- மிளகாய்ப் பொடி இரண்டு ஸ்பூன்
- தனியா பொடி இரண்டு ஸ்பூன்
செய்முறை:
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுப் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் போட்டு நன்கு வதக்கவும்.
- பின்பு பொடிப் பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கையும், பட்டாணியையும் போட்டுப் பச்சையாகப் பொடி செய்யப்பட்ட தனியா, மிளகாய்ப் பொடி இவற்றை எல்லாம் போட்டு ஒரு முறை வதக்கவும்.
- பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும், தக்காளியையும் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
- வாணலியில் போட்ட கறிகாய்கள் அனைத்தும் வெந்த மாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, மசாலாப் பொடி ஆகிய இவற்றை எல்லாம் போட்டு ஒரு கொதி வந்த மாத்திரத்தில் இறக்கி வைத்துத் தேவையான அளவு கொத்தமல்லியை போடவும்.
- இதோ இப்போது சுவையான ஆலுமட்டர் ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக