இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வடகொரியா
தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை!!
வட
கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை
பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இதற்கு
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை
தெரிவித்து வருகின்றது. இதையடுத்து, வடகொரிய தலைவரிடம், அமெரிக்க அதிபர் டொனால்டு
டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில், அணு ஆயுத பரிசோதனை
கைவிடப்படும் என வடகொரியா அறிவித்தது. இதற்கிடையே, வடகொரியா மீண்டும் அணு
ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது என தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.
இது
தொடர்பாக அந்நாடு வெளியிட்ட செய்தியில், வடகொரியா, தெற்கு ஹம்கியோங்கில் உள்ள
சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின்
கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை
அனுப்பி பரிசோதனை செய்துள்ளது. எங்கள் ராணுவம், கூடுதலாக ஏவுகணைகள்
ஏவப்படுகின்றனவா? என்று நிலைமையை கண்காணித்து வருகிறது என தெரிவித்தது.
இந்நிலையில்,
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை
செலுத்தும் மிக பெரிய லாஞ்சரான சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்
பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இது பற்றி கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்தியில், இந்த புதிய மேம்பட்ட சாதனம் ஒரு மிக பெரிய ஆயுதம் ஆக திகழும். எதிரி
நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்க
அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கின்ற வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர
வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டு
உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக