இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இன்றைய காலக்கட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு குழுவாக சேர்ந்து விளையாடுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது.
கிராமப்புறங்களில் குழந்தைகள் அனைவரும் குழுவாக சேர்ந்து விளையாடும்போது உடல் சோர்வு, மனச்சோர்வு நீங்கி அவர்கள் புத்துணர்ச்சி அடைகிறார்கள்.
அவ்வாறு கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் 'மரமும் குருவிகளும்'. இந்த விளையாட்டை பற்றி இங்கு காண்போம்.
எத்தனை பேர் விளையாடுவது?
இந்த விளையாட்டை 25 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
விளையாட்டில் பங்கேற்பவர்களை மூன்று பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். முதல் போட்டியாளராக ஒருவரைத் தேர்வு செய்யுங்கள். அனைவரும் பெரிய வட்டமாக நின்று கொள்ள வேண்டும்.
மையத்தில் முதல் போட்டியாளர் நிற்க வேண்டும். ஒரு குழுவிலுள்ள மூவரில், நடுவில் நிற்பவர் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தியபடி மரமாக நிற்க வேண்டும்.
மரமாக நிற்பவருக்கு இடம், வலமாக நிற்கும் இருவரும் குருவிகளாக மாற வேண்டும். மரமாக நிற்பவரின் தோள்பட்டையில் இரு கைகளையும் வைத்தபடி, இருவரும் குனிந்து நிற்க வேண்டும்.
வட்டத்தின் நடுவில் நிற்கும் முதல் போட்டியாளர், 'மரம்' அல்லது 'குருவி' என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும்.
'மரம்" என்று சொன்னால், ஒவ்வொரு குழுவிலும் மரமாக நடுவில் நிற்பவர், அதிலிருந்து பிரிந்து வேறொரு குழுவில் மரமாக மாறி நிற்க வேண்டும்.
'குருவி" என்று சொன்னால், இருபுறமும் குருவிகளாக நிற்பவர்கள், வேகமாக கலைந்து சென்று, வேறொரு மரத்தின் குருவிகளாக மாறி நின்றுகொள்ள வேண்டும்.
அவ்வாறு அவர்கள் நிற்பதற்குள், முதல் போட்டியாளர் ஓடிப்போய், ஏதாவது ஒரு குழுவில் மரமாகவோ அல்லது குருவியாகவோ நின்று விடுவார்.
இதனால், அந்த குழுவில் மரமாக அல்லது குருவியாக நிற்பவர் 'அவுட்" ஆவார். அவர் வட்டத்தின் நடுவில் நின்று, மீண்டும் விளையாட்டை தொடர வேண்டும்.
பலன்கள் :
சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
உடல் சோர்வு நீங்கும்.
குழு ஒற்றுமை மேம்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக