Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

மாடு, பன்றி இறைச்சி விநியோகிக்க Zomato ஊழியர்கள் மறுப்பு!

மாடு, பன்றி இறைச்சி விநியோகிக்க Zomato ஊழியர்கள் மறுப்பு!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மாடு, பன்றி இறைச்சிகளை விநியோகிக்க மறுப்பு தெரிவித்து கொல்கத்தாவைச் சேர்ந்த ஸோமாட்டோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்!
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் ஹவுரா பாலம் அருகே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸோமாட்டோ ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்., மாடு மற்றும் பன்றி இறைச்சி உணவு வகைகளை விநியோகிக்க மாட்டோம் என்ற எங்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. அது போன்ற இறைச்சி வகைகளை விநியோகிக்க நிர்வாகம் தரப்பில் அழுத்தமும் தரப்படுகிறது. இதை கண்டித்து ஒரு வாரமாக போராடி வருகிறோம்.' என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஸோமாட்டோ நிர்வாகத்தினர் அளித்துள்ள விளக்கத்தில் "இந்தியா போன்ற நாட்டில் அனைவருக்கும் உணவு சுதந்திரம் உள்ளது. உணவு விநியோகத்தின் போது சைவம் அசைவம் என்று எங்களால் பிரிக்க முடியாது. பணியை தேர்வு செய்யும் போதே வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து வகை உணவுகளையும் விநியோகிக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் பணியில் இணைகின்றனர். இது எங்களுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து உணவு விடுதிகளுக்கும் தெரிய்யும். இருப்பினும் ஹவுராவைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினரிடம் மட்டும் இதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் முடிவு எட்டப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியை சேர்ந்த சுக்லா என்பவர், தனது ஸோமாட்டோ கணக்கில் உணவு ஆர்டர் செய்கையில், அவரது உணவினை இஸ்லாமிய நண்பர் விநியோகம் செய்வார் என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. உடனடியாக சுக்லா தனது ஆர்டரினை ரத்து செய்தார். இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. உணவுக்கு மத சாயம் பூசுவதா என கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதேப்போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக