இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தக்காளியில் ஊறுகாய் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா ?
தக்காளியில்
உள்ள பொட்டாசியம் , இரும்புச் சத்து , விட்டமின் C , K , நார்சத்து என எண்ணற்ற ஊட்டச்சத்துகள்
உள்ளன. இதனால்தான் தக்களியை இந்திய சமையலில் கட்டாய உணவாக உட்கொள்கிறோம். தக்காளியில்
ஊறுகாய் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா ?
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- தக்காளி - 4
- எண்ணெய் - 2 tsp
- புளி தண்ணீர் - அரை கப்
- மிளகாய் தூள் - 5 tsp
- மஞ்சள் - 1/2 tsp
- வெந்தையத் தூள் - 1 tsp
- கள் உப்பு - 3 tsp
- தாளிக்க
- எண்ணெய் - 3/4 tsp
- காய்ந்த மிளகாய் - 5
- கடுகு - 1 tsp
- பூண்டு - 10
செய்முறை :
தக்களியை நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அதோடு புளித் தண்ணீர் சேர்க்கவும். அடுத்ததாக மிளகாய்த் தூள், மஞ்சள், வெந்தையத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு எண்ணெய் பிரிந்து வருமாறு வதக்கவும்.
தாளிக்க மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி ஊறுகாயில் கொட்டவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக