Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மஹராஷ்டிராவில் 12 பேர் உயிரிழப்பு!

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

மஹராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் சீரற்ற காலநிலையில் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி புனே மாவட்டத்தில், சீரற்ற காலநிலையின் காரணமாக  9 வயது சிறுவன் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 10500 இற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் களத்தில் உள்ளார்கள் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக