இந்தியாவில்
அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 7டி மற்றும் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை டெல்லியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு
ஸ்மார்ட்போன்களும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளதால்
அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ்
7டி
ஒன்பிளஸ்
7டி ஸ்மார்ட்போன் மாடல் நீலம் மற்றும் சில்வர் நிறத்தில் வெளிவந்துள்ளது,
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் 28-ம் தேதி அமேசான் கிரரேட் இந்தியா
பெஸ்டிவல் சேல் எனும் தலைப்பில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விற்பனைக்கு வரும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும்
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஒன்பிளஸ்
7டி டிஸ்பிளே
ஒன்பிளஸ்
7டி ஸ்மார்ட்போன் மாடல் 6.55-இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400×1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர்10 பிளஸ்
ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எச்டிஆர் 10பிளஸ் டிஸ்பிளே ஆதரவு கொண்டுள்ளதால்
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சிப்செட்
வசதி
ஒன்பிளஸ்
7டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் உடன் அட்ரினோ
640ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஒன்பிளஸ்
7டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 16எம்பி அல்ட்ரா வைடு
ஆங்கிளஸ் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 16எம்பி செல்பீ கேமரா, தரமான எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி
மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ஒன்பிளஸ்
7டி ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை,
ஜிபிஎஸ், என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ரேம்
மற்றும் விலை
8ஜிபி ரேம்
மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் விலை
ரூ.37,999/- 8ஜிபி ரேம்
மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனின் விலை
ரூ.39,999/-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக