Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 9 செப்டம்பர், 2019

'பிரான்சில் வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர்; பாதிப்பேர் 75 வயதுக்கும் மேல்'


 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வீசியது.
பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த பாதிப்பேர் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்று கூறினார்.
பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

கடந்த வெயில் காலத்தில் அங்கு பல முறை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, பள்ளிகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பருவநிலை மாற்றம்: நாமும் நேரடியாக பாதிக்கப்படலாம் - எச்சரிக்கும் அறிக்கை

நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலையை அதிகரிக்கும் பருவநிலை மாற்றம்

மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் இதுவரை அங்கு இருந்திராத வெப்பநிலை பதிவானது.

ஆனால், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!