>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 27 செப்டம்பர், 2019

    அதிசய வைக்கும்... பாலைவன ஏரி !!

    Image result for அதிசய வைக்கும்... பாலைவன ஏரி !!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    நாம் வாழும் இந்த அழகான பூமியில் பலபல அதிசயங்கள் நாம் எள்ளளவும் நம்ப முடியாத வகையில் ஏற்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

     பாலைவனம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது வெயிலும், மணலும்தான். மேலும் நீர் கிடைக்கவே அரிதான இடமாகவும் இது காணப்படுகிறது.

     மேலும் சாதாரணமாக உள்ள ஏரியில் திடீரென்று ஒரு ஏரி உருவானால் எவ்வளவு ஆச்சரியம் மற்றும் எண்ணற்ற கேள்விகளும் நமக்கு எழுகிறதல்லவா?

     ஆம்... உண்மைதான்... மணலும், வெயிலும் நிறைந்த ஒரு பாலைவனத்தில் திடீரென உருவான ஒரு ஏரியைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.

     துனிசிய  நாட்டில் அமைந்துள்ள பாலைவனத்தில் இந்த மர்மமான ஏரி அமைந்துள்ளது.
    இந்த ஏரி பாலைவனத்தில் திடீரென தோன்றியதாகும். இந்த ஏரி தோன்றுவதற்கு முன்னால் அந்த இடமானது பாலைவன மணல்களால் சூழ்ந்துள்ளது.

     எப்படி? எதனால்? இந்த இடத்தில் ஏரி தோன்றியது என யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

     பாலைவன மணல்களுக்கு இடையில் தோன்றிய ஏரி அனைவரையும் அதிசயிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

     மேலும் இந்த ஏரியில் உள்ள நீர் மிகவும் தெளிவாக உள்ளதாக கூறப்படுகிறது.

     இந்த ஏரி தோன்றியவுடன் அனைவரும் இந்த அதிசயமான நிகழ்வை காண அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வர தொடங்கிவிட்டனர்.

     அவர்கள் அந்த ஏரியில் குளித்தும் மகிழ்கின்றனர். ஆனால் இந்த ஏரி திடீரென தோன்றியதாலும், அதில் பல மினரல்ஸ் கலந்து இருப்பதாலும் இதில் யாரும் குளிக்க வேண்டாம் என அரசு கூறினாலும் மக்கள் இதில் குளிக்காமல் இருப்பதை நிறுத்தவில்லை...
    இந்த ஏரி எப்படி உருவாகி இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் இந்த ஏரி உருவான இடத்தில் நீர் உருவாவதற்கான அமைப்புகள் இருந்திருக்கலாம் எனவும், அதனால் கூட இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

     மேலும் இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் பாறைகள் நகர்ந்து நீர் மேலே வந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

     ஆனால் இந்த ஏரி எப்படி உருவானது என்று யாராலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

    இயற்கையின் நிகழ்வுகளுக்கு நம்மால் இன்று வரை எந்த தீர்வும் கண்டுபிடிக்க முடியவில்லை... அப்படியே கண்டுபிடித்தாலும் அது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பது கேள்வியாகவேதான் உள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக