இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாங்கிய
கடனுக்கு வீட்டை அடமானம் செய்து கொடுக்கச் சொல்வதாகச் சொல்லி கிரயம் செய்த மோசடிக்
கும்பலால் எழுதப்படிக்கத் தெரியாத தம்பதி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுபோல் பல
ஊர்களில் பல கோடிகளை ஏப்பம்விட்டுத் தலைமறைவாகி இருக்கிறது அந்தக் கும்பல்.
கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமாபதி-மோகனசுந்தரி தம்பதி. இவர்கள் பத்து
வருடங்களுக்கு முன்பு தங்களுடைய பூர்வீக சொத்துகளை விற்று கேளம்பாக்கம் பகுதியில்
நிலம் வாங்கி வீடு கட்டினார்கள். வீட்டின் மூன்று தளத்தில் மொத்தம் 9 வீடுகள்
உள்ளன. அவர்களுக்கு மூன்று பெண் இருப்பதால் குடும்பச் செலவுக்காக அதே பகுதியைச் சேர்ந்த
ராஜாராம் என்பவரிடம் நகைகளை அடகு வைத்து வட்டிக்கு கடன் வாங்குவதை வழக்கமாக
வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவர் வாங்கிய கடன் 30 லட்சத்தைத் தாண்டியது.
இதனால் ராஜாராம் உமாபதியிடம் வீட்டை அடைமானம் வைக்கச் சொல்லி இருக்கிறார்.
உமாபதிக்கும்
அவர் மனைவி மோகனசுந்தரிக்கும் எழுதப் படிக்கத்தெரியாது. அவர்களுக்குப் புரியக்
கூடாது என்பதற்காக ராஜாராம் ஆங்கிலத்தில் அந்தப் பத்திரத்தை தயார்
செய்திருக்கிறார். அடைமானப் பத்திரத்தை சிவக்குமார் என்பவருக்கு விற்பனை
செய்வதுபோல 10.08.2017ல் 1.38 கோடிக்கு கிரயப் பத்திரமாக மாற்றி பத்திரம் பதிவு
செய்துவிட்டார். மேலும், அந்த வீட்டை வாங்குவதற்கு ரெப்கோ வங்கி 1.37 கோடி கடன்
கொடுத்துள்ளது
நிலம்
வாங்கும் முழுத்தொகைக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. ஆனால், இவர்கள்
ரூ.1.38 கோடி மதிப்பில் கிரயம் செய்யும் நிலத்துக்கு ரூ.1.37 கோடி ரெப்கோ வங்கிக்
கடன் அளித்துள்ளது. இந்தப் பணம் மோகனசுந்தரியின் வங்கிக் கணக்கில் (திருப்போரூர்
சிட்டி யூனியன் பேங்க்) செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராஜாராமிடம் வாங்கியிருந்த
கடனுக்காக நிரப்பப்படாத காசோலை ஒன்றில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்
மோகனசுந்தரி. அந்தக் காசோலையை வைத்து மோகனசுந்தரி வங்கிக் கணக்கிலிருந்து பணம்
செலுத்திய அன்றே 1.37 கோடி பணத்தையும் ராஜாராம் சுருட்டிவிட்டார்.
அதோடு நின்றுவிடாமல் `நீங்க கேளம்பாக்கத்தில்
இருக்கிறீங்க. திருப்போரூர்ல உங்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் சிரமமாக
இருக்கும்’ எனச் சொல்லி அவரே 15,000 பணத்தைக் கொடுத்து ஐசிஐசிஐ வங்கியில் புதிதாக
வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், பழைய வங்கிக் கணக்கு
இன்னும் முடிவு பெறாமல் வெறும் 20 பைசா இருப்போடு இருந்து வருகிறது. இந்த
நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு உமாபதியும் இறந்துவிட்டார். மூன்று
பெண்களுக்கும் திருமணமான நிலையில், கேளம்பாக்கம் வீட்டிலேயே மோகனசுந்தரி
வசித்துவந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சென்னையில் உள்ள ரெப்கோ வங்கி தலைமை
அலுவலகத்திலிருந்துவந்து அந்த வீட்டில் ஏல அறிவிப்புக் கடிதத்தை ஒட்டினார்கள்.
இதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார் வீட்டின்
உரிமையாளர் மோகனசுந்தரி. `இந்த வீடு எங்களுடையது. நாங்கள் எந்த வங்கியிலும் கடன்
வாங்கவில்லை’ என வங்கி ஊழியர்களிடம் தெரிவித்தார். வீட்டு உரிமையாளர் சிவக்குமார்
வாங்கிய கடனை செலுத்தவில்லை. இதனால் இந்த வீடு ஏலத்துக்கு வருவதாக
வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். ஒன்றும் புரியாமல் வழக்கறிஞர் ஒருவரை
நாடியபோதுதான் பெரிய மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளோம் எனத் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜாராம் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட
சிவக்குமார், ஜெயசுதா, திருநாவுக்கரசு ஆகியோரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு
செய்தனர். மேலும், அந்த வங்கிகளின் மேலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர்
விசாரணை செய்துவருகிறார்கள். ராஜாராம் மற்றும் அவரின் கூட்டாளிகள் தலைமறைவாக
இருந்துவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மோகனசுந்தரியிடம் பேசினோம்.
``எங்க வீட்டுக்கு சீல் வைக்க வந்த பேங்க் அதிகாரிங்க, இந்த வீடு உங்க பேர்ல
இல்லை. சிவக்குமார் என்பவர் பெயரில் இருக்கிறது. அவர் வாங்கிய கடனுக்காக வீட்டை
ஏலத்தில் விடப்போகிறோம்னு சொன்னாங்க. இதைக் கேட்ட உடனே தலையில இடிவிழுந்தமாதிரி
ஆகிடுச்சு. எங்களுக்கு ஒண்ணுமே புரியல. போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுத்தும்
சரியான நடவடிக்கை எடுக்கல.
காஞ்சிபுரத்துக்கும் பத்துமுறைக்கு மேல் நடையாய்
நடந்தோம். இப்போதுதான் வழக்கு போட்டுள்ளார்கள். இன்னும் 45 நாள்ல எல்லோரையும் காலி
செய்யச் சொல்கிறார்கள். வாடகைக்கு இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்
எனத் தெரியவில்லை. எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. கூலி வேலைக்குச்
செல்லவேண்டிய நிலையில் இருக்கிறேன்” என்கிறார் வேதனையாக.
சுமார் 40 கோடிக்கு மேல் ராஜாராம் மற்றும்
அவரின் கூட்டாளிகள் ஏமாற்றி இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை வங்கிக்கணக்கு
வைத்திருப்பவரின் அனுமதி இல்லாமல் வங்கி மேலாளர்கள் பரிமாற்றம் செய்தது தவறு.
வழக்கறிஞர் முருகேசன்
இதுகுறித்து
வழக்கறிஞர் முருகேசனிடம் பேசினோம். ``திருப்போரூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கி
ராஜாராமின் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இதனால் ராஜாராம் செய்யும் மோசடிக்கு அந்த
வங்கியில் இருப்பவர்கள் உதவி செய்திருக்கிறார்கள். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்
என்பதைப் பயன்படுத்தி ராஜாராம் இதுபோல் பலரை மோசடி செய்துள்ளார்.
நிலவிற்பனைக்குப்
பின்புலத்தில் நடந்தவை எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாது. இதுபோல்
பல்லாவரம், குரோம்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம், ஆலந்தூர், தி.நகர்,
திருப்போரூர் என பல இடங்களில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 40
கோடிக்கு மேல் ராஜாராம் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஏமாற்றி இருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய தொகையை வங்கிக்கணக்கு வைத்திருப்பவரின் அனுமதி இல்லாமல் வங்கி
மேலாளர்கள் பரிமாற்றம் செய்தது தவறு. இரண்டு வங்கி மேலாளர்களின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.”
என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக