இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சமையல் எரிவாயுவிற்கான தேவை வரவிருக்கும் பண்டிகை காலத்தில்
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு, மத்தியில் சவுதி அரேபியா எண்ணெய் ஆலை
தாக்குதல் காரணமாக அக்டோபர் மாத தொடக்கத்தில் சமையல் எரிவாயு ஏற்றுமதி பாதிக்கலாம்
என்றும் கூறப்படுகிறது.
ஒரு புறம் தேவை அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், இந்த
சமயத்தில் தேவையான சமையல் எரிவாயு இருக்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
அதிலும் இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த
திருவிழா பருவத்தில், சமையல் எரிவாயுவிற்கான தேவை அதிகரித்தாலும், அந்த சமயத்தில்
போதியளவு இருப்பு இருக்குமா? மேலும் இது விலையேற்றத்திற்கான வழி வகுக்கும் என்றும்
கருதப்படுகிறது.
சவுதி
அராம்கோ எல்.பி.ஜி ஏற்றுமதி ஒத்தி வைப்பு
சவுதி அராம்கோ நிறுவனம் கடந்த செப்டம்பர் 14 அன்று, ஹவுதி
கிளர்ச்சியாளர்களால், அதன் அப்காய்கில் உள்ள எண்ணெய் ஆலையும், குர்ராய்ஸ் உள்ள
எண்ணெய் வயலும் தாக்கப்பட்டதையடுத்து, உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த
நிலையில் சவுதி அராம்கோ எல்.ஜி.பி விநியோகத்திற்கான ஏற்றுமதியை அக்டோபரில் தள்ளி
வைத்துள்ளது. இந்த நிலையில் அக்டோபரில் தேவை அதிகமாக இருக்கும் என்ற நிலையில்,
இறக்குமதி குறையும் என்பதால், இது கவலை கொள்ளும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
மாற்று
தேடி அலையும் நிறுவனங்கள்
இந்தியாவில் முக்கியமான சமையல் எரிவாயு சப்ளையரான இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள்,அக்டோபர் மாதத்தில் சமையல் எரிவாயு தேவைக்கு
ஏற்ப, விநியோகம் இருக்க வேண்டும் என்றும் மாற்று சந்தையை தேடுவதாகவும், அதன் மூத்த
அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேவை
அதிகரிக்கும்
வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் பண்டிகை சீசன் ஆரம்பிக்க
உள்ளதால் எல்.பி.ஜி சிலிண்டர்களுக்கான தேவை அதிகம் இருக்கும் என்றும்
எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் சவுதி அக்டோபர் மாதத்திற்கான இரண்டு முதல்
கொள்முதலையும் ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் நாங்கள் கூடுதல்
எல்.பி.ஜிக்ளுக்காக நாங்கள் மிகவும் கடினமாக பேராடி வருகிறோம் என்றும், ஏனெனில்
அக்டோபர் - நவம்பர் மாதங்கள் மிக முக்கியமான மாதங்களாக கருதுகிறோம், என்றும்
இந்தியன் ஆயிலின் தலைவர் சஞ்சீவ் சிங், தனியார் செய்தித்துறைக்கு அளித்த
தொலைப்பேசி பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியா
மிகப்பெரிய இறக்குமதியாளர்
சர்வதேச அளவில் எல்.பி.ஜி இறக்குமதியில் இந்தியா சிறந்த
இறக்குமதியாளர் என்றும், அதிலும் மொத்த தேவையில் பாதிக்கும் மேல் மற்ற நாடுகளில்
இருந்தே இறக்குமதி செய்கின்றது என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சவுதி
அரேபியா கத்தார், ஓமன் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி
செய்து வருகின்றது. அதிலும் பருவ நிலையும் மாறியுள்ள நிலையில் எல்.பி.ஜி கேஸ்க்கான
தேவை செப்டம்பர் இறுதியில் இருந்தே தேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
நான்காவது
காலாண்டிலும் எல்.பி.ஜி தேவை அதிகரிக்கும்
இந்த நிலையில் அடுத்து வரும் நான்காவது காலாண்டிலும்
எல்.பி.ஜிக்கான தேவை அதிகரிக்கும் என்றும், அதிலும் பிரதமர் நரேந்திர மோடியின்
இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவச கேஸ் வழக்கப்பட்டு
வருவதையடுத்து, தற்போது தேவையானது மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வார
தொடக்கத்தில் அபுதாபி நேஷனல் ஆயில் கோ.. அராம்கோவின் இடைவெளியை நிரப்பியது.
ஏனெனில் வழக்கமான இறக்குதியுடன் இது மேலும் இரண்டு இறக்குமதிகளை வழங்கியது
குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த இறக்குமதிகளை எப்படி செய்யும் என்ற
கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
நிலைமை
சீரடைய 3 வாரம் ஆகலாம்
சவுதி அராம்கோவின் நிலைமை சீரடைய இன்னும் மூன்று வாரங்கள்
ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சவுதி அராம்கோவின் ஏற்றுமதி சுமார் 6
லட்சம் டன்னாக குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் முன்னதாக இது
7,08,000 டன் என இருந்தது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து
கூறியுள்ள பி.பிசி.எல் இயக்குனர் ஆர் ராமசந்திரன், எல்.பி.ஜி தொடர்ந்து இறக்குமதி
செய்வதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை என்றும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக