இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிட்சனில் எண்ணெய் கறை, புகைக் கறை அல்லது வீட்டில் குழந்தைகள் இருந்தால் பென்சில், க்ரையான்ஸ் , சாக்பிஸ் கறைகள் என சுவற்றைக் காணவே சங்கடமாக இருக்கும்.
வீட்டுச் சுவர்களை என்னதான் பாதுகாத்தாலும்
எப்படியாவது கறைகள் படிந்துவிடும். கிட்சனில் எண்ணெய் கறை, புகைக் கறை அல்லது வீட்டில்
குழந்தைகள் இருந்தால் பென்சில், க்ரையான்ஸ் , சாக்பிஸ் கறைகள் என சுவற்றைக் காணவே சங்கடமாக
இருக்கும். அந்தக் கறைகள் வீட்டின் அழகையும் கெடுக்கும். கறைகள் என்ன செய்தாலும் படிந்தே
தீரும் என்றால் அவ்வபோது முடிந்தவரை துடைப்பது நல்லது.

பேக்கிங் சோடா : பேக்கிங் சோடா
வீட்டை சுத்தம் செய்ய உதவும் நண்பன் எனலாம். அந்தவகையில் சுவர் கறைகளை அகற்ற பேக்கிங்
சோடாவைத் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைக்கவும். பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி
பேக்கிங் சோடா பேஸ்ட் தொட்டு கறை உள்ள பகுதிகளைத் தேய்த்தால் கறைகள் முற்றிலுமாக அகலும்.

வினிகர் : பாத்ரூம், கிட்சன்
கறைகளை அகற்ற வினிகர் உதவும். ஒரு மூடி வினிகரை ஒரு பவுல் வெதுவெதுப்பான நீரில் கலந்து
அந்த தண்ணீரை பஞ்சு தொட்டு கறை படிந்துள்ள பகுதிகளில் துடைத்தால் கறைகள் நீங்கும்.
தெளிவாக கறைகள் நீங்கவில்லை எனில் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வினிகரை நேரடியாகத்
தொட்டு தேய்த்தால் நீங்கும். காற்று புகும் வசதி இருப்பின் ஜன்னல்களை திறந்து வைத்தால்
வெயில் பட்டு கறை நீங்கும்.

போரக்ஸ் பவுடர் : போரக்ஸ் பவுடர்
ஆற்றல் அதிகம் என்பதால் கவனமாகக் கையாளவும். போரக்ஸ் பவுடரை தண்ணீர்ல் கெட்டியான பேஸ்டாக
கலந்துகொள்ளவும். பின் கறை படிந்துள்ள இடத்தில் தேய்த்து கழுவவும். பாத்ரூம் தரை நீங்காத
கறைகளை போக்க இரவு தரை மற்றும் சுவறில் போரக்ஸை தண்ணீரில் குழையக் குழையக் கரைத்து
தரையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் காலை பிரெஷ் கொண்டு தேய்க்க நீங்காத
கறை அடியோடு அகன்றுவிடும்.

டூத்பேஸ்ட் : சுற்றி உள்ள க்ரயான்ஸ்,
பென்சில் கறைகளுக்கு டூத்பேஸ்ட் பெஸ்ட் தீர்வு. பேஸ்டை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து
பிரெஷ் கொண்டு கறை படிந்த இடத்தில் தேய்க்க கறைகள் நீங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக