
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
BSNL Offer: ஒருநாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இது 2ஜி மற்றும் 4ஜி-யில் செல்லுபடியாகும்.
சமீபமாக தொலைதொடர்பில், பி.எஸ்.என்.எல் மிகவும்
புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துகிறது. ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஜியோ
ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின், விலையேற்றத்திற்கு பதிலளித்து, தன்
திட்டங்களின் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை செய்து வருகிறது.
குறிப்பாக நிதி நெருக்கடியைக் கடந்து வரும்
நேரத்தில், பி.எஸ்.என்.எல் மாதாந்திர அடிப்படையில் அறுமுகப்படுத்தியுள்ள பேக்
வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும்
இல்லை. பி.எஸ்.என்.எல் தனது பிரபல நீண்ட கால திட்டங்களில் ஒன்றின் விலையை
மாற்றியமைத்துள்ளது.
பி.எஸ்.என்.எல் நிறுவனம்
தன்னிடம், ரூ 899 விலைக்கு நீண்ட கால திட்டத்தை கொண்டுள்ளது. இது ப்ரீபெய்ட்
சந்தாதாரர்களுக்கு நல்ல நன்மைகளை வழங்குகிறது. இத்திட்டத்தை விளம்பரப்படுத்தும்
ஒரு பகுதியாக, இந்த நீண்ட கால திட்டத்தின் விலையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு
குறைத்துள்ளது பி.எஸ்.என்.எல். ஆகவே, ரூ 899 திட்டம் இப்போது ரூ 799 விலைக்கு
கிடைக்கிறது. இந்த சலுகையை செப்டம்பர் 23-க்குள் ரீசார்ஜ் செய்து, பெறலாம். அதாவது
முந்தைய விலையில் ரூ 100 இப்போது குறைந்துள்ளது.
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு
இத்திட்டம் 180 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒரு நாளைக்கு 50 எஸ்.எம்.எஸுடன்
அன்லிமிடட் கால் வசதியையும் சந்தாதாரர்கள் பெற முடியும். அதோடு ஒருநாளைக்கு 1.5
ஜிபி டேட்டாவையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இது 2ஜி மற்றும்
4ஜி-யில் செல்லுபடியாகும்.
இருப்பினும், இந்த திட்டத்தில் ஒரு பிரச்னை
உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பி.எஸ்.என்.எல் சந்தாதாரர்கள்
மட்டுமே இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால், இந்தியாவின் மற்ற
பகுதிகளில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக