இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த
உலகமே பல அற்புதங்களால் உருவானது என்று கூட சொல்லலாம். நம்மால் நினைத்துக்கூட
பார்க்க முடியாத அளவிற்கு மர்மங்களும், அதிசயங்களும் பூமியில் அதிக அளவில்
இருக்கின்றன.
இதுபோன்ற
பல இயற்கை அதிசயங்கள் எவ்வாறு உருவானது என்று கண்டுபிடிக்கும் ஆர்வம் மற்றும்
தேடல் நம்மிடம் அதிகமாகவே உள்ளதல்லவா?
நாம்
இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போது பிறப்புக்கு முன்னாடியும், இறப்புக்கு
முன்னாடியும் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்வது பற்றித்தான் ஆர்வமாக
இருப்போம்.
ஒரு
இடத்தில் நெருப்பை பற்ற வைத்தால், சில மணி நேரம் கழித்து அந்த நெருப்பு
அணைந்துவிடும். ஆனால் மழை பெய்தால் கூட இந்த இடத்தில் எரியும் நெருப்பு அணைவதில்லை
என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மைதான் அத்தகைய உலகில்
நம்பமுடியாத அற்புதக் காட்சிகளைப் பற்றி இன்று பார்ப்போம்.
எங்கு அமைந்துள்ளது?
மத்திய
ஆசியாவில் உள்ள துருக்மெனிஸ்தானின் காராகும் பாலைவனத்தில் தர்வாசா என்ற
கிராமப்பகுதியில் நரகத்தின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் இந்த எரிவாயு பள்ளம்
அமைந்துள்ளது. இவற்றை நரகத்தின் கதவு என்றும் அழைப்பார்கள்.
ஆழ்துளைக்
கருவி மூலம் இந்த இடத்தை துளைக்கும்போது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் பகுதி
சரிந்து பூமியினுள் ஒரு பள்ளமாக உருவாகியதாக கூறப்படுகிறது. இது ஒரு பிரம்மாண்டமான
வியக்கத்தக்க கண்டுபிடிப்பு நிகழ்வாக அமைந்தது.
உலகப்
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்தக் குழியை ஆராய்ச்சி செய்த பிறகு இதில் ஆயில்,
மீத்தேன் வாயு மற்றும் இயற்கை வாயு உள்ளன
என்பதை கண்டறிந்தனர்.
பின்பு
இந்தக் குழியில் உள்ள பகுதிகள் வெடித்து எரிய ஆரம்பித்தது. இந்தக் குழியில் உள்ள
வாயு காரணமாகத்தான் இந்த எரிப்பள்ளம் எரிந்துக் கொண்டு இருக்கின்றன.
இதன்
அதிசயம் என்னவென்றால் இந்த எரிவாயு பள்ளம் தொடர்ந்து சில ஆண்டுகளாக எரிந்துக்
கொண்டே இருக்கிறது. மேலும் எரிவாயு பள்ளத்திலிருந்து வெளிவரும் தீக்குழம்புகள்
மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வண்ணங்களில் காணப்படுகிறது.
இரவு
நேரங்களில் இந்த இடத்தைப் பார்த்தால் கண்டிப்பாக நரகத்தின் நுழைவுவாயில் என்றுதான்
கூறுவார்கள். மனிதர்களை அச்சமூட்டும் இடமாகவும் இந்த இடம் திகழ்கிறது.
காராகும்
பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளம் பிரபலமான சுற்றுலாத்தலமாக திகழ்கின்றன.
இவற்றை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக