இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நமது
போனில் வரும் ரிங் ஆகும் நேரத்தை, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 20 நெடிகளாக
குறைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக, ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டி வருகிறது.
இது
குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர்டெல், இந்தியாவில் அனைத்து டெலிகாம்
நிறுவனங்களுக்கும், சராசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்துள்ளது,
ஆனால் முகேஷ் அம்பானியின் ஜியோ மட்டும் வெறும் 20 நொடிகள் மட்டும் ரிங் நேரத்தை
அமலில் வைத்துள்ளது.
இதனால்
ஒருவருக்கு வரும் அழைப்பை ஏற்கும் முன்னரே, வாடிக்கையாளர்கள் தங்களது போன் கால்களை
இழக்கும் நிலை உள்ளது. இதனால் இன்கமிங்க் காலாக வருவது, செயற்கையாகவே, மிஸ்டு
காலாக மாற்றப்படுகிறது.
மிஸ்டு
கால் ஆகும் இன்கமிங் கால்கள்
உதாரணத்திற்கு
வோடாபோன் அல்லது ஏர்டெல்லில் இருந்து கால் செய்யும் ஒருவர், ஜியோவிற்கு கால்
செய்தால், அது அவருக்கு 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும், இந்த குறைவான நேரத்தால்
வரும் இன்கமிங் கால்கள் கூட, மிஸ்டுகால்களாக மாறுகின்றன, ஆக இந்த நிலையில் ஜியோ
வாடிக்கையாளர் ஏர்டெல் அல்லது வோடபோன் வாடிக்கையாளருக்கு திரும்ப கால் செய்கிறார்.
இதனால் செயற்கையாகவே இந்த இரு நிறுவனங்களுக்கு அவுட்கோயிங் கால்கள் குறைந்து
விடுகிறது. ஜியோவுக்கு அவுட்கோயிங்க் கால்களும் அதிகரிப்பதோடு, மிஸ்டு கால்களும்
அதிகரிக்கின்றன. இதனால் மற்ற நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ஐயுசி தொகையும் அதிகரிக்கிறது.
மற்ற
நிறுவனங்களுக்கு நஷ்டம்
இந்த
ரிங் நேர குறைப்பால், ஜியோ தவிர மற்ற நிறுவனங்களுக்கு வரும் இன்கமிங் கால்கள் 30 சதவிகிதம்
செயற்கையாகவே மிஸ்டுகால்களாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய தொலைத் தொடர்பு
ஆனையத்தின் விதிகளின் படி, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து மிஸ்டு கால்
பெறும் நிறுவனமானது, ஐ.யு.சி கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும் என்றும்
கூறப்படுகிறது. இந்த விகித கட்டணமானது, செயற்கையாகவே ஜியோ நிறுவனத்திற்கு செலுத்த
வைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் வாயிலாக ஜியோ நிறுவனம் மொத்தம் 65 சதவிகித
டெலிகாம் டிராபிக்கை தன் வசம் வைத்துள்ளதோடு, பெரும் ஆதாயம் பார்த்து வந்துள்ளது
என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஜியோ
மறுப்பு
ஏர்டெல்லின்
இந்த பகிரங்கமான குற்றச்சாட்டுக்கு, ஜியோ நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இது
குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஜியோ நிறுவனம், 30 நொடிகள் ரிங் நேரம் என்பது
தான் இந்தியாவில் கடைபிடிக்கும் வழக்கமான ஒன்று தான். ஆனால் உலகளவில் பெரும்பாலான
டெலிகாம் நிறுவனங்கள் 15 - 20 நொடிகளுக்கு தான் ரிங் நேரத்தை வைத்துள்ளன என்றும்
கூறியுள்ளது. மேலும் ஜியோவிற்கு வரும் 25 - 30 சதவிகித கால்கள் மிஸ்டுகால்கள் தான்
என்றும் கூறியுள்ளது.
உண்மையில்
மோசடியா?
இந்த
பிரச்சனையால் அங்காளி பங்காளி சண்டைபோல் சண்டையிட்டுக் கொள்ளும் இந்த
நிறுவனகளுக்கு மத்தியில், உண்மை என்ன? என்று, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு
ஆணையமான டிராய் வாயைத் திறந்தால் மட்டுமே தெரியும், எனினும் பலவருடமாக தொலைதொடர்பு
சேவையில் இருந்து வந்த ஏர்டெல்லும் சரி, வோடபோன் ஐடியா, பொதுத்துறை நிறுவனமான
பி.எஸ்.என்.எல் நிறுவனமும் சரி, ஏன் இந்த குறுகிய காலத்தில் மளமளவென சரிவடைந்தன.
ஏர்டெல் சொல்வது போல் இது உண்மை தானா? என்றும் பல கேள்விகள் எழுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக