Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 செப்டம்பர், 2019

குறும்புக்கார சிறுவன்..!

Image result for குறும்புக்கார சிறுவன்..!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


  ஆத்தூர் என்னும் ஊரில் கணேஷ் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றார். அவர் போகும் வழியில் ஓரிடத்தில் கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று அறிவதற்காக அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்தார்.

அங்கே கழுதைகளுடன் வணிகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கும், சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. வணிகரிடம் கணேஷ் சென்று, உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார்.

அதற்கு வணிகர் ஐயா! நான் வெளியூரிலிருந்து வருகிறேன். பத்துக் கழுதைகளின் மேல் வெல்லத்தை ஏற்றிக்கொண்டு இந்த ஊர் சந்தைக்கு வந்தேன். இங்கே வரும்போது என் கழுதைகளில் ஒன்று துள்ளிக் குதித்ததால், அதன் முதுகில் இருந்த மூட்டை கீழே விழுந்து விட்டது. அந்த மூட்டை மிகுந்த எடையுள்ளதாக இருந்தது. என் ஒருவனால் அதைத் தூக்க முடியவில்லை.

அப்போது இந்தச் சிறுவன் அங்கு வந்தான். அவனை அழைத்து, இந்த மூட்டையைக் கழுதையின் மேல் ஏற்ற உதவி செய். உனக்கு நிறைய வெல்லம் தருகிறேன். நீ மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றேன். இவனும் என்னுடன் சேர்ந்து மூட்டையைத் தூக்கி கழுதையின் முதுகில் ஏற்றினான்.

நான் சொன்னது போலவே, கை நிறைய வெல்லத்தை எடுத்து இவனிடம் தந்தேன். ஆனாலும் இவன், நீங்கள் நிறைய வெல்லம் தருவதாகச் சொன்னீர்கள். சொன்னது போல நடந்து கொள்ளவில்லை. குறைவான அளவு வெல்லமே தருகிறீர்கள் என்றான். நான் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று மறுத்தான்.

நான் முதலில் எடுத்ததைப் போலவே இன்னொரு பங்கு வெல்லம் நிறைய எடுத்து பெற்றுக்கொள் என்று தந்தேன். இதுவும் குறைவாகத்தான் இருக்கிறது. நீங்கள் நிறைய வெல்லம் தந்தால்தான் வாங்கிக் கொள்வேன் என்று மறுத்தான். மேலும், சிறிதளவு வெல்லத்தைச் சேர்த்து இவனிடம் தந்தேன். இதுவும் நிறைய இல்லை என்று வாங்க மறுத்தான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இவனோ, நிறைய வெல்லம் கொடு. நிறைய வெல்லம் கொடு என்று அடம் பிடிக்கிறான். அதற்குள் இங்கே கூட்டம் கூடி விட்டது.

கூட்டத்தில் உள்ளவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர் என்றார். அந்தச் சிறுவன் குறும்பு செய்து விளையாடுகிறான் என்பது கணேஷ்க்கு புரிந்தது. அதனால், இப்போது வணிகரிடமிருந்து கணேஷ் வெல்லத்தை வாங்கினார். தன் ஒரு கையில் சிறிதளவு வெல்லத்தை வைத்தார். இன்னொரு கையில் இன்னும் அதிகமாக வெல்லத்தை வைத்தார்.

இரண்டு கைகளையும் அந்தச் சிறுவனின் முன் நீட்டி, எந்தக் கையில் எவ்வளவு வெல்லம் உள்ளது? உன்னால் சொல்ல முடியுமா? என்று கேட்டார். இந்த கையில் வெல்லம் குறைவாக உள்ளது. அந்த கையில் வெல்லம் நிறைய உள்ளது, என்றான் சிறுவன்.

எந்த கையில் நிறைய வெல்லம் உள்ளது? என்று மீண்டும் கேட்டார் கணேஷ். அதற்கு சிறுவன் நிறைய வெல்லம் இருந்த கையை காட்டினான். இந்தக் கையில் நிறைய வெல்லம் உள்ளது என்று நீயே ஒப்புக் கொண்டாய். இதை வாங்கிக் கொண்டு சண்டை போடாமல் இங்கிருந்து சென்றுவிடு என்றார். வேறு வழியில்லாத அந்தச் சிறுவன் வெல்லத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!