இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அதிக
கலோரிகளை தரும் அரிசி வடை - இது விளையாட்டு வீரர்களுக்கானது
தேவையான பொருள்கள்:
- புழுங்கல் அரிசி ஒரு ஆழாக்கு
- துருவிய தேங்காய் ஒரு கப் அல்லது பத்து ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 5
- பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவு
- புளித்த கெட்டித் தயிர் அரை ஆழாக்கு
- கருவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- அரிசியை நன்றாக கல் போக தண்ணீரில் களைந்து விடுங்கள்.
- இப்போது அரிசி களைந்த தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த அரிசியுடன் உளுத்தம் பருப்பையும் போட்டு தயிரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்னர் நன்கு ஊறிய அரிசி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, பெருங்காயம் இவை அனைத்தையும் கெட்டியாகத் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது அரைத்த அந்த மாவுடன் கருவேப்பில்லை, கொத்தமல்லியை நன்கு கழுவி சேர்த்துக் கலக்கவும்.
- இப்போது சுத்தமான துணி அல்லது இலையை எடுத்துக் கொண்டு மாவை பக்குவமாக எடுத்துத் தட்டி எண்ணெய்யில் பத்திரமாக போட்டுப் பொன்னிறமாக ஆகும் வரையில் பொரிக்கவும்.
- பிறகு பொன்னிறத்தில் ஆன வடையை எடுத்து தட்டில் வைத்து சுடச் சுட பரிமாறவும். இதோ சுவையான அரிசி வடை தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக