இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம் அருகே உள்ள அயன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் வீட்டிலேயே
போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல், கணினியை திறந்து,
தனது அன்றாட பணிகளை துவங்கியுள்ளார். திடீரென, கண்ணனிற்கு ஒரு இமெயில் வந்துள்ளது.
அதை திறந்து
பார்த்துவிட்டு, மீண்டும் தனது பணிகளை செய்யத் தொடங்கினார். அதன்பிறகு அவரது கணினி
கோளாறாக ஆஃப் ஆகியது. பிறகு அதுவே தானான ஆன் ஆகியது. நிம்மதி பெருமூச்சுவிட்ட
கண்ணன் மீண்டும் தனது பணியை தொடங்கினார்.
ஆனால் அவருக்கு அப்போது
தெரியவில்லை, இது தான் தொடக்கம் என்று. அவர் கம்புயூட்டரை திறந்து பார்த்தால்,
அதில் இருந்த கல்யாணம் நிகழ்ச்சிகள் தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும்
மறைந்து போயுள்ளன. இதையடுத்து இன்னொரு இமெயில் அவரது கம்ப்யூட்டருக்கு வந்துள்ளது.
அதில், 1120 அமெரிக்க
டாலர்களை கொடுத்தால் தான் இந்த போட்டோக்களும், வீடியோக்களும் திரும்ப
கொடுக்கப்படும் என்றும், இல்லையென்றால் இவை அணைத்தும் டெலிட் செய்யப்படும் என்று
மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்த புகாரைப்
பெற்ற காவல்துறையினர், விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று நாங்குநேரி பகுதியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது
குறிப்பிடத்தகுந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக