Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஆடும் புலியும்....!


 Image result for ஆடும் புலியும்....!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

குழந்தைகள் பலரோடு ஒன்றுச்சேர்ந்து விளையாடுவதால் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும், மேலும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.

நாம் இன்று பார்க்க இருப்பது கிராமங்களில் குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றான ஆடும் புலியும் விளையாட்டை பற்றி பார்க்கலாம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

பல பேர்

விளையாட்டில் முக்கியமானவர் :

ஆடும், புலியும்

எப்படி விளையாடுவது?

முதலில் விளையாடும் குழந்தைகள் அனைவரும் மைதானத்தின் நடுவில் வட்டமாக கைகோர்த்து நின்றுக் கொள்ள வேண்டும்.

அதன்பின் விளையாடும் குழந்தைகளில் ஒருவரை ஆடாகவும், மற்றொருவரையும் புலியாகவும் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வட்டத்தில் கைகோர்த்து நிற்கும் குழந்தைகளில் உட்புறத்தில் ஒருவர் உள்ளேயும், மற்றொருவர் வெளியேயும் நின்றுக் கொள்ள வேண்டும்.

அதில் ஆடாக தேர்வு செய்த நபர் வட்டத்தின் உட்புறத்தில், புலியாக தேர்வு செய்யப்பட்ட நபர் வட்டத்தின் வெளியே நின்றுக் கொள்ள வேண்டும்.

பிறகு வட்டத்தில் கைகோர்த்து நிற்கும் நபர்களுக்கும், வெளியே புலியாக நிற்கும் நபருக்கும் உரையாடல் நிகழும்.

புலி : சங்கிலி புங்கிலி கதவைத் திற !

பிள்ளைகள் : நான் திறக்க மாட்டேன் வேங்கைப்புலி !

புலி : வரலாமா? வரக்கூடாதா?

பிள்ளைகள் : வரக்கூடாது!

இவ்வாறு வட்டத்தில் கைகோர்த்து நிற்கும் குழந்தைகள் புலியாக இருக்கும் நபரை வட்டத்தில் உள்ளே வரமுடியாத படி வழி மறித்து நின்றுக் கொள்வார்கள்.

ஆனால் புலியாக இருப்பவர் எப்படியாவது வட்டத்திற்கு நுழைய முயற்சி செய்வார். குழந்தைகள் அவரை உள்ளே விடுவதற்கு இடத்தை தரமாட்டார்.

அதன்பின் புலியாக இருக்கும் நபர் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்து விட்டு கடைசியாக ஓரிடத்தில் புகுந்து வட்டத்தின் உள்ளே சென்று விடுவார்.

பின்பு வட்டத்தில் ஆடாக இருக்கும் நபர் வெளியே வந்துவிடுவார். இவ்வாறு ஆட்டை பிடிப்பதற்கு மீண்டும் புலி வெளியேறும்போது, ஆடு மீண்டும் வட்டத்திற்குள் சென்றுவிடும்.

இப்படியே மாறி மாறி விளையாட வேண்டும். கடைசியாக புலியாக இருக்கும் நபர் ஆடாக இருக்கும் நபரை பிடித்துக் கொள்வார்.

பலன்கள் :

நடிப்புத்திறன் வெளிப்படும்.

இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக