இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள்
விளையாட்டு மூலமாக கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை எளிதாக கற்றுக் கொள்ள
முடியும். மேலும் பலவிதமான சொற்களையும் விளையாட்டுப்போக்கில் குழந்தைகள் கற்றுக்கொள்ளலாம்.
நாம்
இன்று குழந்தைகளிடத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகளில் ஒன்றான
கல்லா... மண்ணா... விளையாட்டைப் பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இரு
குழுவாக சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில்
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு நடுவர் ஒருவரை தேர்வு செய்துக் கொள்ள
வேண்டும். பிறகு விளையாடும் நபர்கள் கல் மற்றும் மண் என்று இருபகுதியை தேர்வு
செய்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்
விளையாடும் நபர்கள் அனைவரும் கல் மற்றும் மண்ணில் ஏதாவது ஒரு பகுதியில்
நின்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது
நடுவர் 'கல்லுல ஒரு கால்" என்று சொன்னவுடன் விளையாடும் நபர்கள் அனைவரும்
மண்ணில் நிற்க வேண்டும்.
அதேபோல
'மண்ணுல ஒரு கால்" என்று சொன்னவுடன் அனைவரும் கல்லில் நிற்க வேண்டும்.
இவ்வாறு நடுவராக இருக்கும் நபர் மாறி மாறி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
விளையாடும்
நபர்கள் கவனமாக நடுவர் சொல்லும் இடத்தில் நிற்காமல், மாறி நின்றுவிட்டால் அவர்
தோற்றவர் ஆவார்.
இதேபோல்
ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கடைசியாக ஒருவர் மட்டும் மீதி இருப்பார்.
அவர்தான் இந்த விளையாட்டின் வெற்றியாளர் ஆவார்.
பலன்கள் :
கேட்கும்
திறன் மற்றும் நினைவாற்றலை வளர்க்கும்.
இலக்கை
நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
கால்கள்
வலுப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக