இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒருவரின்
ஓவியமே அதில் உள்ள கருத்துக்களை பேசுகிறது. அப்படி இருக்க மனிதர்களால்
உருவாக்கப்பட்ட ஓவியத்திற்கு பல பல விலை மதிப்புகள் கொடுக்கின்றோம்.
ஆனால் இயற்கை உருவாக்கிய ஓவியத்திற்கு விலை
மதிப்பே கிடையாது என்பதுதான் உண்மை.
மேலும் இயற்கையின் படைப்பில் அமைந்த பல
அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.
சுவற்றில் வரையும் ஓவியங்களைப் பற்றி
கேள்விப்பட்டிருப்போம்... ஆனால் பாறைகளில் இயற்கையாக காணப்படும் ஓவியங்கள் அதுவும்
சுரங்கங்களில் இயற்கையாக அமைந்த அமைப்பு, ஓவியம்போல் காணப்படும் காட்சி எங்கு
உள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இன்று நாம் அந்த அழகிய சுரங்க ஓவியங்களைப்
பற்றிதான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
எங்கு உள்ளது?
இந்த அதிசயம் ரஷ்யாவில் உள்ள ஒரு
சுரங்கத்தில்தான் உள்ளது.
உப்புச் சுரங்கங்கள் ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்
நகருக்கு அடியில் பல நூற்றுக்கணக்கான அடி தொலைவில் அமைந்துள்ளன.
என்ன அதிசயம்?
ரஷ்யாவில் உள்ள கைவிடப்பட்ட ஒரு சுரங்கத்தில் தான்
நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் அழகிய வண்ண ஓவியங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது.
இது போன்று பாறை முழுவதும் வண்ணம் பூச
வேண்டுமென்றால் மனிதர்களுக்கு பல வருடங்கள் ஆகும்.
இந்த அழகிய ஓவியங்கள் பல்வேறு வடிவங்களிலும்,
பல்வேறு வண்ணங்களிலும் காணப்படுகிறது.
பல்வேறு
வண்ணம் மற்றும் வடிவங்களில் காணப்படும் இந்த அழகிய ஓவியங்கள் உண்டாக இயற்கை ஒரு
சில மாதங்களே எடுத்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சுவர்கள் போல் அலங்கரிக்கப்பட்ட மற்றும்
வண்ணமயமான வடிவங்களால் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
மஞ்சள், பச்சை, நீலம் போன்ற பல வண்ணங்களில் இந்த
ஓவியங்கள் காணப்படுகின்றன.
மேலும் இவை அலை போன்ற வடிவிலும், கோடுகள் போன்ற
வடிவிலும் அமைந்து நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு அழகாக காட்சியளிக்கிறது.
அவை
மிகவும் அற்புதமானவையாகவும், கிட்டத்தட்ட மனிதனால் உருவாக்கப்பட்டவை போலவே
காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக