இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருவாரூர்
மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய
சதுப்பு நிலக்காடுகளாகும்.
திருவாரூரிலிருந்து
ஏறத்தாழ 59கி.மீ தொலைவிலும், முத்துப்பேட்டையிலிருந்து ஏறத்தாழ 15கி.மீ தொலைவிலும்,
தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 88கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து ஏறத்தாழ 70கி.மீ
தொலைவிலும் அமைந்துள்ள இடம்தான் சதுப்பு நிலக்காடுகள்.
சிறப்புகள் :
இது
திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் பல ஹெக்டர் பரப்பளவில்
அமைந்துள்ளது. ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில்
அலையாத்தி காடுகள் வளர்கின்றன.
இங்கு
பலவகையான மரங்கள் வளர்கின்றன. புவியியல் அமைப்பில் முக்கியமான ஈரப்பத
நிலப்பகுதியாக முத்துபேட்டை அலையாத்தி காடுகள் குறிப்பிடப்படுகின்றன.
அலையாத்தி
காடுகளை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா
பயணிகள் குவிகிறார்கள்.
கடல்
அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தி நிலத்தைக்காப்பதால் காலம் காலமாக நிலவிவரும்
தமிழ்ப்பெயர் அலையாத்திக்காடுகள். ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள்
எனப்படுகின்றன.
ஒவ்வொரு
ஆண்டும் அதிக எண்ணிக்கையிலானப் பறவைகள் இந்த பகுதிக்கு வருகின்றன. சுனாமி
பேரலையில் இருந்து முத்துப்பேட்டையை காப்பாற்றியது அலையாத்தி காடுகள்தான்.
திருவாரூர் மாவட்டத்தை இயற்கை சீற்றங்களில் இருந்து காக்கக்கூடிய அரணாகவும்
அலையாத்திக் காடுகள் உள்ளன.
சதுப்பு
நிலக்காடுகளின் அழகைக் காண வரும் சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ஓய்விடங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பல மீட்டர் நீளத்திற்கு மரத்திலான நடைபாதைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
இது
தவிர ஓய்விடத்திலிருந்து சதுப்பு நிலக்காடுகளைக் காணும் வகையில் கண்காணிப்பு
கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முத்துப்பேட்டை
வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று ஜாம்புவானோடைப் பகுதியில் இருந்து தனியார்
மீன்பிடி படகுகள் மூலம் அலையாத்திக் காடுகளுக்குச் சென்று இயற்கை நமக்கு தந்த
பரிசை ரசிக்க முடியும்.
எப்படி செல்வது?
திருவாரூரிற்கு
அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
திருவாரூரில்
இருந்து பேருந்து மூலமாகவோ அல்லது வாடகை வாகனங்கள் மூலமாகவோ இந்த சதுப்பு
நிலக்காடுகளை அடையலாம்.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருவாரூரில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக