இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைப்பருவம்
அங்கும், இங்கும் ஓடிப்பாடி விளையாட வேண்டிய பருவமாகும். இந்த பருவத்தில்
அவர்களின் விருப்பத்திற்கேற்ப மற்றவர்களுடன் குழுவாகச் சேர்ந்து விளையாடும்போது
அவர்களுக்கு ஒரு புரிதல் தன்மை உண்டாகும்.
இன்று
நாம் குழந்தைகள் பரபரப்பாக விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றான உப்புக்கோடு
விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த
விளையாட்டை 10 முதல் 20 நபர்கள் வரை ஒன்றுச்சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில்
இந்த விளையாட்டை தொடங்குவதற்கு முன்பு இரண்டு அணிகளாக பிரிந்து கொள்ள வேண்டும்.
பிறகு
விளையாடும் மைதானத்தில் செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்க வேண்டும். அதன்பின்
நடுவில் ஒரு கோட்டை வரைந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு
அந்தக் கோட்டிற்கு இடையில் மற்றவர்கள் கை நீட்டி தொட முடியாத அளவிற்கு
இடைக்கோடுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு
கோடுகளைப் போட்ட பின்பு விளையாட்டை தொடங்கும் முதல் அணியின் தலைவரை முதல் கோட்டிலும்,
அந்த அணியில் மீதமுள்ளவர்கள் அடுத்தடுத்த கோட்டியிலும் நின்றுக் கொள்ள வேண்டும்.
அதன்பின்
எதிரணியில் உள்ளவர்கள், இவர்கள் அனைவரையும் ஏமாற்றி இந்த கோட்டை எல்லாம் கடந்து
வெளியில் செல்ல வேண்டும்.
முதல்
கோட்டில் நிற்கும் தலைவருக்கு நடுக்கோட்டிற்கு சென்று எதிரணியில் உள்ள நபர்களை
அவுட் செய்வதற்கு அதிகாரம் உண்டு.
அப்போது
இவரது கவனத்தை திருப்புவதற்கு எதிரணியில் இருக்கும் நபர்கள், மற்றொரு
கட்டத்திலிருந்து நடுக்கோட்டில் கால் வைத்து 'தண்ணி தண்ணி" என்று சொல்ல
வேண்டும்.
இவ்வாறு
சொல்லிய பிறகு, முதல் போட்டியாளர் அவரை தொடுவதற்கு ஓட வேண்டும். அவர் யாராவது
ஒருவரைத் தொட்டால் கூட ஆட்டம் முடிந்து விடும்.
இந்த
எல்லா கோடுகளை கடந்து வெளியேறும் நபர் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு
என்று உரத்த குரலில் சத்தமிட்டப்படி ஒவ்வொரு கோடுகளில் நிற்கும் நபர்களை
தொட்டுவிட்டு, மீண்டும் கோட்டை கடந்து தலைவர் நிற்கும் முதல் கோட்டிற்கு வர
வேண்டும்.
பலன்கள் :
இலக்கை
நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.
கால்கள்
வலுப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக