Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 செப்டம்பர், 2019

சஹாராவின் கண்

 Image result for சஹாராவின் கண்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனமாகும். குளிர் பனிப்பாலை நிலமான அண்டார்ட்டிக்காவிற்கு அடுத்ததாக கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப்பெரிய பாலைவனமாகும். ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்த சஹாராவில் அதற்கு முந்தய காலத்தில் ஏரிகளும், ஆறுகளும் அங்கே இருந்துள்ளன..!

செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக்கடற்பகுதி, அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கும் 9,000,000 சதுர கிலோமீட்டர்கள் (3,500,000 சதுர மைல்கள்) என்ற பரப்பளவை கொண்ட இப்பாலைவனத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத ஒரு மர்மமான நிலவியல் உருவாக்கம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது..!


நூற்றாண்டுகளாகதரை மட்டத்தின் வெற்று பார்வைக்கு தலைமறைவாக இருந்த சஹாராவின் பெரிய மற்றும் மர்மமான நிலவியல் உருவாக்கம் விண்வெளியில் இருந்து காணவும் வெளிப்பட்டது.

உருவாக்கம் :



ரிசாட் (Richat) கட்டமைப்பு என அழைக்கப்படும் இந்த 'சஹாரா கண்' உருவாக்கமானது மவுரித்தேனியாவின் மேற்கு சஹாரா பாலைவன பகுதியில் அமைந்துள்ளது.

பாலைவன பகுதி :



தரையில் சுமார் 25 மைல் (40 கி.மீ) அளவில் குறுக்கே நீளும் இந்த உருவாக்கத்தினை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் முழுமையாக புரிந்துக்கொள்ளமுடியவில்லை.

25 மைல் :



நான்கு நாள் பூமி சுற்று பாதை பயணமான ஜெமினி நான்காம் விண்கல (1965) விண்வெளி வீரர்களுக்கு பூமியின் நிலபகுதி புகைப்படங்களை எடுத்துவர கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

1965 :



அவர்கள் குறிப்பாக வட்ட வடிவிலான அம்சங்கள் கொண்ட தாக்கம் போன்ற கட்டமைப்புகளை தேடியுள்ளனர், பாதிப்பினால் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் (Impact craters) மிக முக்கியமானவைகள் ஏனெனில் ஆவிகள் தான் பூமியின் வரலாற்றை அதிகம் புரிந்துக்கொள்ள உதவும்.

பெரும் பள்ளங்கள் :



உடன் பூமி மீது எத்தனை பாறைகள் மோதியுள்ன, எத்தனை தாக்குதல்களுக்கு பூமி உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை கொண்டு விஞ்ஞானிகளால் பூமியின் எதிர்காலத்தை பற்றி யூகங்களை வகுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூகங்கள் :



அப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட 'சஹாரா கண்' ஆனது ஒரு தாக்க பள்ளமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் பல காலமாக நினைத்திருந்தார்கள்..!

தாக்க பள்ளம் :


ஆனால் அந்த குறிப்பிட்ட பகுதியில் நீர்தாங்கிய போதுமான உருகிய பாறைகளை கண்டுபிடிக்கப்பட முடியவில்லை என்பதால் இது நம்பமுடியாத இயற்கையான, மிகவும் சிக்கலான ஒரு உருவாக்கம் என்ற கோட்பாடுகள் வகுக்கப்பெற்று வருகின்றன.

கோட்பாடுகள் :


சஹாராவின் கண் பகுதி உள்ள இடத்தில ஒரு காலத்தில் பூமியின் மேலோடு அடுக்கு குவிமாடம் (dome of layers of the Earth's crust) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


பூமியின் மேலோடு அடுக்கு குவிமாடம் :


ஆய்வின்படி, மகா கண்டமான பாஜ்சியா டெக்டோனிக் பலகை நகர்வு மூலம் கிழிகப்பட்ட (இப்போது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா) அதே சமயத்தில் தான் இந்த கண் உருவாக்கம் தொடங்கியுள்ளது அதாவது 100-க்கும் மேற்பட்ட மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு..!
100 மில்லியன் ஆண்டு :


சிலர் இந்த  சஹாரா கண் ஆனது பிளாட்டோ விவரித்த நீர் மற்றும் நிலம் வளையங்களின் (concentric rings of water and land) அட்லாண்டிஸ் நகரின் (city of Atlantis) மிச்சம் என்றும் நம்புகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக