Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 செப்டம்பர், 2019

அவதானப்பட்டி சிறுவர் பூங்கா.

Image result for அவதானப்பட்டி சிறுவர் பூங்கா !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கிருஷ்ணகிரியிலிருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து ஏறத்தாழ 107கி.மீ தொலைவிலும், தருமபுரியிலிருந்து ஏறத்தாழ 48கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய ஏரி மற்றும் சிறுவர் பூங்காதான் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா.

சிறப்புகள் :

 அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய இடமாகும்.

 இந்த ஏரிக்கு தேவையான நீர் ஆதாரம் கிருஷ்ணகிரி அணைக்கட்டில் இருந்து ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறுகிறது.

 எனவே, இது வற்றாத ஏரியாக ஆண்டு முழுவதும் திகழ்கிறது. இந்த ஏரி சாகச படகு சவாரிக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

 இங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

 நிழல் தரும் மரங்கள், பரந்த புல் தரைகள், இளைப்பாறும் கூடங்கள், படகு இல்லம் போன்ற பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

 இந்த சிறுவர் பூங்கா மற்றும் ஏரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும், ஏரியின் அருகே இயற்கையை ரசிக்கக்கூடிய வகையில் பசுமையான வயல்கள் உள்ளன.

 குழந்தைகளுடன் ஏரியில் படகு சவாரி செய்ய உகந்த இடமாகும். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இப்பூங்கா மற்றும் ஏரிக்கு வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் உள்ள ர் சுற்றுலாப்பயணிகள் இவ்விடத்திற்கு அதிகமாக வருகை புரிகின்றனர்.

எப்படி செல்வது?

கிருஷ்ணகிரிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலம் இந்த ஏரிக்குச் செல்லலாம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

ஏரி.
படகு பயணம்.

இதர சுற்றுலாத்தலங்கள் :

கிருஷ்ணகிரி அணை.
அரசு அருங்காட்சியகம்.
கெலவரபள்ளி அணை.
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்.
சந்திரசூடேஸ்வரர் கோவில்.
தளி ஏரி மற்றும் பூங்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக