Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 செப்டம்பர், 2019

மரக்கன்று

 Image result for மரக்கன்று
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கோடை விடுமுறை முடிந்து ஜீன் மாதம் முதல் நாள் மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கூடம் வருகிறார்கள். புது புத்தகம், புது நோட்டு, புது பேக்கு, புது பேனா, பென்சில் என்று எல்லாமே புதுசு. அதுக்கு மேல புது வகுப்பு. கடந்த ஆண்டு முதல் வகுப்பு படித்தவர்கள் இந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு. நான்காம் வகுப்பு படித்தவர்கள் இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு. ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஆறாம் வகுப்பு. எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் டி.சியை வாங்கிக் கொண்டு புதிய பள்ளிக்கூடம் செல்லவிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல! கடந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பில் வகுப்பாசிரியையாக இருந்தவர் வயது மூப்பின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆக ஐந்தாம் வகுப்புக்கு புதிய ஆசிரியரும் கூட.

ஒரு மாத விடுமுறை முடிந்து வந்ததால், மாணவர்கள் தங்கள் நண்பர்களோடு அளாவளாவிக் கொண்டார்கள். வகுப்பறையை சுத்தம் செய்வதும், நண்பர்கள் அருகில் அமர இருக்கையைத் தேர்வு செய்வதும் கலகலப்பாக இருந்தது.

காலை வழிப்பாட்டுக் கூட்டம் முடிந்ததும், தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்புக்கும் அறிவிப்பு கொடுக்க மாணவர்கள் புதிய வகுப்பறைக்குள் வரிசையாக செல்கின்றார்கள். தலைமை ஆசிரியர் தமது அலுவலகத்தில் அமர்ந்து பணியை செய்து கொண்டிருக்க, நாற்பது வயது மதிக்கத்தக்க, ஐந்தேமுக்கால் அடி உயரத்தில் புது நிறத்தில், புதிய ஜோல்னா பேக்கை தோளில் ஒரு பக்கமாக போட்டுக் கொண்டு வந்தவர் தலைமை ஆசிரியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு ஒரு தாளைக் கொடுத்தார். சார்! என் பெயர் முத்துமணி பணியிடம் மாறுதலில் வந்திருக்கேன் என்றார்.

வாங்க சார்! வணக்கம், ரொம்ப நல்லது உட்காருங்க சார். பணிப் பதிவேட்டை வாங்க சரிபார்த்துக் கொண்டார் தலைமை ஆசிரியர். இருவரும் பேசிக் கொண்டே ஐந்தாம் வகுப்பை நோக்கி நடந்தனர். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் முத்துமணியை அறிமுகம் செய்து வைத்து, தலைமை ஆசிரியர் சென்று விட்டார். மாணவர்கள் புதிய ஆசிரியரை புதிய கோணத்தில் பார்த்தனர். பின் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மாணவர்களுடைய பார்வையில் இந்த ஆசிரியர் எப்படிப்பட்டவரோ. பயங்கரமா அடிப்பாரோ? பார்கவே பயமா இருக்க. அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறை அமைதியாக இருந்தது. இது தான் சமயம் என்று ராகவன் அருகில் இருந்த குமராவேலை தொடையில் கிள்ளினான். குமாரவேல் வலியைப் பொறுத்துக் கொண்டு இருந்தான். விடவில்லை ராகவன் பலமாக கிள்ளினான். குமாரவேல் பல்லைக் கடித்துக் கொண்டு தலையை அசைக்காமல் வலியையும் தாங்கிக் கொண்டு ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருந்தான். கால் மட்டும் ஆடியது.

என் பெயர் முத்துமணி. இனி உங்களுக்கு நான் தான் வகுப்பாசிரியர். இன்றைக்கு நான் புத்தகத்தில் உள்ள பாடங்களை நடத்தப் போவதில்லை. நான் உங்களுக்கு அறிமுகமாகிவிட்டேன். நீங்கள் எனக்கு அறிமுகமாக வேண்டும், இல்லையா. அதனால! வருகைப் பதிவேட்டில் உள்ளபடி நான் பெயரை வாசிப்பேன். நீங்கள் உங்களைப் பற்றி கூற வேண்டும். உங்கள் பெயர், அப்பா அம்மா பெயர். அப்பா அம்மா தொழில் இது தவிர வேறு ஏதேனும் நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும்; என்று ஆசைப்பட்டால் சொல்லலாம். அதாவது உங்களுக்குப் பிடித்தது, பிடிக்;காதது எது பற்றி வேண்டுமானாலும் சொல்லலாம் வருகைப் பதிவேட்டில் உள்ளவாறு ஆசிரியர் பெயரை வாசிக்க ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரையும் மிக ஆழமாகக் கவனித்தார் ஆசிரியர். அருமைக்கனி என்று பெயர் வாசித்தார். யாரும் எழுந்திருக்காததால், யார் அருமைக்கனி என்று கேட்டார்.

உடனே ராகவன் எழுந்து கையைக் கட்டிக் கொண்டு, சார் அவன் ஒழுங்கா பள்ளிக்கூடம் வரமாட்டான் சார், என்றான். நான்காம் வகுப்பு படிக்கும் போது எங்க டீச்சர் செம சாத்து சாத்திருவாங்க. அதனால அவன் பள்ளிக்கூடத்துக்கு சரியாவே வரமாட்டான். வந்தாலும், செம அரை கிடைக்கும். மதியம் சத்துணவு சாப்பாடு வரை இருப்பான், சாப்பிட்டுவிட்டு போயிடுவான்.

சரி, நீ இன்னைக்கு ஸ்கூல் விட்ட பிறகு அவன் வீட்டுக்குப் போய், நமக்கு புது சாரு வந்திருக்காங்க. அடிக்க மாட்டாங்க என்று சொல்லி அழைத்து வர வேண்டும். அவனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வரவேண்டியது உன்னுடைய பொறுப்பு.

சார், அவன் வீட்டுக்கு யாரும் போக மாட்டாங்க சார். பயமா இருக்கும். நான் அவன் வீட்டுக்குப் போனா! எங்க அம்மா என்னை அடிப்பாங்க.

அருமைக்கனி வீட்டுக்குப் போக பயமா இருக்குமா. ஏன்? சார் அவங்க அம்மாவுக்கு பேய் பிடிச்சிருக்கா, அதான் அவங்க கால்ல விலங்கு போட்டிருப்பாங்க. கிட்ட போனா கழுத்தப் பிடிச்சி அமுக்கி கொன்னுரவாங்களாம். எங்க அம்மா சொன்னாங்க. ராகவன் மூச்சி விடாம, சொல்லி முடித்தான்.

சரி, ராகவா நீ நாளைக்கு காலையில என் கூட வா, வந்து அருமைக்கனி வீட்டக் காட்டு. சரி சார்.

மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கூடம் ஆரம்பித்தது. தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு ராகவனுடன் சென்றார், அருமைக்கனி வீட்டுக்கு. இரண்டு தெரு தாண்டிதான் அருமைக்கனி வீடு. போகிற வழியில் ஒரு டீக்கடை. அந்தக் கடையில் கையில் பேப்பருடன் சிலர். டீக்கிளாசில் உள்ள டீயை குடித்துக் கொண்டு சிலர். ஆசிரியர் முத்துமணி, ஒரு மாணவனுடன் செல்வதை வேடிக்கைப் பார்த்தனர். தெரு முனையில் சில பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டும், குடத்தை கழுவிக்கொண்டும் இருந்தனர்.

தெருவிலே ஒரு குறுக்குச் சந்தைக் கடக்கும் போது, சார்! இந்தச் சந்து வழியே போனா எங்க வீட்டுக்குப் போய்டலாம். நான் இப்பிடித்தான் வீட்டுக்குப் போவேன்.

அப்படியா! ராகவா. உங்க வீட்ல யார் யார் இருக்காங்க?...

எங்க அப்பா, எங்க அம்மா, என் தங்கச்சி. பிறகு எங்க தாத்தா, பாட்டி.

பரவாயில்லியே தாத்தா, பாட்டி எல்லாம் உங்க கூட இருக்காங்களா. அப்போ உனக்கு நிறைய கதை சொல்லுவாங்கதான.

ஆமா சார். சார்… சார்.. இந்த தெருவில தான் அருமைக்கனி வீடு இருக்கு. இந்த தெருவில கடைசி வீடு. அந்தா… அந்தா.. அந்த போல் இருக்கு பாருங்க. அந்த வீடு தான். கிழ மேல் தெருவில தெற்க பாத்த வீடு. தெருவையொட்டி ஆறடி உயரத்தில் இடிந்தும் இடியாமலும் ஒரு சுவர். அதில் துருப்பிடித்த தகர கதவு. தகரக் கதவைத் திறந்தால் இடப்புறம் ஒரு பப்பாளி மரம், ஒரு எலுமிச்சை முதல் முறையாக காய்ப்பதற்காக பூத்திருந்தது. நேரே பார்த்தால் ஒரு ஓட்டு சாய்ப்பு. கதவு கிடையாது. ஓட்டு சாய்ப்பு தூணில் தான் அருமைக்கனியின் அம்மாவைக் கட்டிப் போட்டிருப்பார்கள். தெருவில் இருந்து எதிர் ஓட்டு சாய்ப்பு வரை மேற்கு பார்த்த இன்னுமொரு சாய்ப்பு. அதில் தான் சமையல் மற்றும் படுக்கை.

ஆசிரியர் தகரக் கதவைத் தட்டினார். சத்தம் இல்லை. அருமைக்கனி, டேய் அருமைக்கனி இது ராகவன். ராகவன் குரல் கேட்டு சமையல் அறையிலிருந்து தலையை வெளியே நீட்டியவாறு நோட்டமிட்டான் அருமைக்கனி. கையில் தட்டு அதில் ஊறுகாய் சோறு.

அதற்குள் ஆசிரியர் தகரக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். கையில் தட்டுடன் நின்ற ராகவனையும், ஆசிரியரையும் மாறிமாறி பார்த்தான். அவனுக்கு ஆசிரியரை யாரென்று தெரியாது.

ராகவன் முந்திக் கொண்டான். டேய் அருமைக்கனி, இது நம்ம புது சாருடா. இப்பதான் சாப்பிடப் போறியாப்பா மென்மையாக கேட்டார் ஆசிரியர் முத்துமணி. இல்ல இது எங்க அம்மாவுக்கு சோறு பொங்கி முதல்ல எங்க அம்மாவுக்குத்தான் கொடுப்பேன். அவங்களுக்கு கொடுத்துவிட்டு நானும் சாப்பிடுவேன்.

எங்க உங்க அப்பாவ காணோம். எங்க போயிருக்காங்க.

எங்க அப்பா காலையிலே, செங்கமாலுக்கு வேலைக்கு போயிடுவாங்க. பத்து மணிக்கு வந்து சோறு சாப்பிட்டு விட்டு மறுபடியும் செங்கமாலுக்கு வேலைக்கு போய்டுவாங்க.

சரி வேற யார் இருக்கா உங்க வீட்ல?.. தாத்தா, பாட்டி யாராவது? தாத்தா, பாட்டி எனக்கு கிடையாது. எங்க சின்னதாயிக்கு சோறு குடுத்தேன்.

சாப்பிட்டுவிட்டு மிட்டாய் கேட்டுச்சி. அண்ணன் சாயங்காலம் வாங்கித்தாரேன்னு சொல்லிட்டு, பால்வாடியில கொண்டு விட்டுட்டு வந்திட்டேன்.

சரி, அருமைக்கனி உனக்கு படிக்க ஆசை இருக்கா! பள்ளிக்கூடத்துக்கு வரலாம் இல்லையா. ஏன் பள்ளிக்கூடத்துக்கு வராமல் இருக்கிறாய்? அருமைக்கனியின் தோளில் ஒரு கையை ஆதரவாகப் போட்டப்படி கேட்டார் ஆசிரியர்.

நான் பள்ளிக்கூடத்துக்கு வந்தா அடிக்க மாட்டியளோ.

ஆமா அடிக்கமாட்டேன்.

லேட்டா வந்தாலும் அடிக்க மாட்டியளோ.

கண்டிப்பா அடிக்க மாட்டேன். ஆனா நிதமும் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடனும். மதியம் சத்துணவு சோறு வீட்டுக்கு கொண்டு வந்தால் அடிப்பியளோ. மாட்டேன், அடிக்க மாட்டேன். நீ மதியம் சத்துணவு வாங்கி முதல்ல நீ சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு மீண்டும் சாப்பாடு, சாம்பார் வாங்கி உங்க அம்மாவுக்க சாப்பிட கொடுத்து சாப்பிட வச்சிட்டு பள்ளி;க்கூடத்துக்க வந்தால் போதும் சார் அப்படீன்னா இன்னைக்கே பள்ளிக்கூடத்துக்கு வாரேன்.

சார், அருமைக்கனி கணக்கு நல்லா போடுவான் சார். கணக்குல இவன்தான் சார் பர்ஸ்ட். காலில் கட்டுப் போட்டு தூணில் கட்டியிருந்ததால் காலில் புண் இருந்தது. ஆர்பாட்டம் எதுவும் செய்யவில்லை. தலைமுடி கட்டாமல் அவிழ்ந்து கிடந்தது. பார்வையில் மிரட்சி தெரிந்தது. அருமைக்கனி சாப்பாடுத் தட்டை அம்மாவிடம் கொடுத்து சாப்பிடும்மா என்றான். சாப்பாடு தட்டை வாங்கி பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். சாப்பிடவில்லை. அருமைக்கனி தவிர, வீட்டு ஆட்கள் தவிர வேறு யார் இருந்தாலும் சாப்பிடுவதில்லை.

ஆசிரியர் அருமைக்கனியின் தாயார் அருகில் வந்தார். வாசலில் குறுக்கே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தார். கண்ணின் ஒரத்தில் லேசாக ஆசிரியர். என்னம்மா அமைதியா இருக்கீங்க. எவ்வளவு அருமையான புள்ள தெரியுமா உங்க மகன். இவன நீங்க புள்ளையா பெத்ததற்கு நீங்க தவம் இருந்திருக்கனும். மற்றவங்க சொல்ற மாதிரி உங்களுக்கு பேயுமில்ல. உடல் நோயுமி;ல்ல.

சார்.. எங்க அம்மாவுக்கு பேய் பிடிக்கலையா சார். பிறகு ஏன் சார் இப்படியே இருக்காங்க. அருமைக்கனி ஆசிரியர் முகத்தை ஏறிட்டுப் பாhத்தான். ஆசிரியர் அருமைக்கனியின் கையைப் பிடித்துக்கொண்டு தகரக்கதவு தலைவாசல் வரை வந்தார். தோளில் கையைப் போட்டவாறு கேட்டார். உங்க அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டிருக்காங்களா? என்று கேட்டார்.

ஆமா சார். எங்க அப்பா தினமும் மது குடிப்பாரு. அப்போ எங்க சும்மா ஏன் இப்படி தினமும் குடிச்சிட்டு வாறியன்னு கேட்பாங்க. சண்டை வந்துடும். கடைசியில எங்க அம்மாவை அடிச்சி, முடியப் பிடிச்சி ஆட்டி மிதிச்சி தள்ளிடுவாறு இந்தச் சண்ட அடிக்கடி நடக்கும். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருமைக்கனியின் அப்பா வீட்டுக்குள் வந்தார். ஆசிரியரைப் பார்த்து ஒரு கனம் திகைத்து, மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விட்டுக் கொண்டு தலையில் கட்டியிருந்த துண்டை கையில் வைத்துக்கொண்டு, ஜயா நீங்க யாருன்னு தெரியலீங்களே என்றார்.

நான் புதுசா இந்த ஊரு பள்ளிக்கூடத்திற்கு வந்திருக்கிற ஆசிரியர். உங்க பையன் சரியா பள்ளிக்கூடத்துக்கு வர்றதில்லைன்னு தெரிஞ்சதால அவன பள்ளிக்கூடத்திற்கு கூப்பிடுவதற்காக வந்தேன். நல்ல நேரம் நாங்க கிளம்புறதுக்குள்ளே வந்துட்டீங்க. ரொம்ப நல்லதாப் போச்சு..

ஜயா நான் காலையிலே எழுந்திரிச்சி செங்கமாலுக்கு போய்டுவேன். என் பையன் தான் பாத்திரம் கழுவி, சோறு பொங்கி வச்சிட்டு பள்ளிக்கூடம் போவான். லேட்டா வர்றதுனால டீச்சரும், வாத்திமாரும் முழங்கால் போட வச்சி தினமும் அடிக்கிறாங்க. ஆனால் நல்லாப் படிப்பாம்யா என் பையன். என் நிலமை இப்படி ஆகிவிட்டது. என் குடும்பமே சீரழிந்துவிட்டது. நான் என்ன செய்வேன். ரெண்டு பச்சப் புள்ளைகள வச்சிகிட்டு எனக்கு நிம்மதியே போச்சுய்யா. முன்ன மாதில்லாம் நான் இப்ப குடிக்கிறதில்ல சார். ரெண்டு வருசமாச்சு பேய் பிடிச்சி இப்படி உருக்குலைஞ்சு போய்ட்டா. பிள்ளைகளுக்கு நல்ல சோறு தண்ணி கிடையாது.

உங்க மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என்று யார் சொன்னது. இது பேய் கிடையாது. நீங்க சம்மதிச்சா சீக்கிரம் குணப்படுத்திடலாம். எனது நண்பர் மனநல மருத்துவர். இதைவிட மோசமா இருந்தவங்களேயே சுகமாக்கி இருக்கிறார். நான் அவரிடம் இன்றைக்கே பேசி நாளை மாலையில் கூட்டி வருகிறேன்.

ஜயா நீங்க, எனக்காக வேண்டாம் இந்தப் புள்ளைகளுக்காக வேண்டி செய்யுங்க. எங்க கடன் வாங்கியாவது மருத்துவம் பாக்கிறேன்.

நான்கு மாதம் கழித்து அருமைக்கனியின் தாயார் நன்கு குணமாகியிருந்தார். டேய் அருமைக்கனி, அம்மா நட்டு வைத்த பப்பாளி கன்றும், எலுமிச்சை கன்றும் எப்படி வளர்ந்து காய்த்து குலங்குது. பார்க்கவே சந்தோசமா இருக்கு.

அம்மாவின் முகத்தில் விழும் சந்தோச அலைகளைப் பார்க்க, பார்க்க அருமைக்கனிக்கு ஆனந்தமாக இருந்தது.

அடுத்த விநாடியே அம்மாவின் கண்ணில் இருந்து கண்ணீர். டேய் அருமைக்கனி, இந்த மரக்கன்றுகளையே இப்படி பார்த்து பார்த்து வளர்த்திருக்கியே… என்னை நீ எப்படியெல்லாம் கவனிச்சிருப்பன்னு எனக்கு யாரும் சொல்ல வேண்டாம்டா. மார்பில் அணைத்துக் கொண்டாள்.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக