Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 செப்டம்பர், 2019

செவ்வாய் பகவானைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா ?

Image result for செவ்வாய் பகவானைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா ?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com





 நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தபடியாக வருபவர் செவ்வாய் பகவான். பிறவியிலே சிறந்த பிறவி மானுடப் பிறவி. அந்த மானுடப் பிறவியில் உடலில் இரத்தமும், எலும்பும் நன்றாக இருக்க வேண்டும்.

ஏனெனில் எலும்புகள் பலவீனமானால் மனிதனால் எந்த வேலையும் செய்ய முடியாது. இரத்தம் சுண்டினாலும் உடல் பலவீனம் அடையும். இப்படி மனிதனுடைய உடலில் முக்கிய பங்காக விளங்கும் இரத்தத்திற்கும், எலும்பிற்கும் அதிபதியான செவ்வாய் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

செவ்வாய்க்கு உரிய மலர்கள் - செண்பகம், செவ்வரளி

செவ்வாய்க்கு உரிய நிறம் - சிவப்பு

செவ்வாய்க்கு உரிய உலோகம் - செம்பு

செவ்வாய்க்கு உரிய நவரத்தினம் - பவளம்

செவ்வாயின் வடிவம் - முக்கோணம்

செவ்வாய்க்கு உரிய வாகனம் - ஆட்டுக்கடா

செவ்வாயின் ஆதிக்க எண் - 9

செவ்வாய் பகவானின் இயல்புகள் :

செவ்வாய் சுய ஒளி அற்ற கிரகம்.

செவ்வாய் மனித உடலில் உள்ள எலும்புக்கும், மஜ்ஜைக்கும் காரணமாவர்.

இவர் சிவப்பு நிறத்தை தன்னகத்தே கொண்டவர்.

மனைக்கு அதிபதி செவ்வாய் ஆவார்.

இவர் கோபமும், வைராக்கியமும் கொண்டவர்.

செவ்வாயின் காயத்ரி மந்திரம் :

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக