Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

சிங்கப்பூர் அரசின் அதிரடி அறிவிப்பு!

சிங்கப்பூர் அரசின் அதிரடி அறிவிப்பு! 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து தேவையான ஆவணங்களை பெற்றபின்பு இலங்கை மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்கலாமென சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மகேந்திரன் தொடர்பில் கடந்த ஜனவரி முதல் ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுவருவதாகவும் எனினும் இந்த ஆவணங்கள் இதுவரை சிங்கப்பூர் அரசிடம் கையளிக்கப்படவில்லை என இலங்கை உயர் ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

“நாங்கள் ஆவணங்களைப்பெறும்போது, ​​ மகேந்திரனை ஒப்படைப்பதென்ற கோரிக்கையை சிங்கப்பூர் சட்டத்தின்படி மேலும் பரிசீலிப்போம்” என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த அர்ஜுன மகேந்திரன், 2015 ஆம் ஆண்டில் தனது பிணைமுறி வியாபாரியான மருமகனுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த திங்களன்று சட்டமா அதிபர் திணைக்களம் 21,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியுறவு அமைச்சகம் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சிங்கப்பூரில் தாக்கல் செய்வதற்காக ஒப்படைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!