Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

பதிவுகளுக்கான லைக் கவுண்ட்டுகளை நீக்கப்போகும் ஃபேஸ்புக்!

 Image result for facebook  drop like counts 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

உலகின் பல கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இதுவரை பயனாளர்கள் இடும் பதிவுகளுக்கு எத்தனை பேர் லைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை காட்டி வந்த ஃபேஸ்புக் நிறுவனம் அதை மறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இதன் முன்னோட்டத்தை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதன் சோதனை ஓட்டத்தை தொடங்கியிருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் இந்த திடீர் நடவடிக்கையில் இறங்கியிருப்பதற்கு காரணம், பயனாளர்கள் மற்ற நண்பர்களின் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக்கையும், தங்கள் பதிவுகளுக்கு கிடைக்கும் பதிவுகளையும் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையை மறைப்பதன் மூலம் பயனாளர்கள் தங்கள் பதிவுகளை டெலிட் செய்யவோ அல்லது பதிவுகள் இடுவதை தவிர்க்கவோ மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
ரிவர்ஸ் இஞ்சினியரிங் நிபுனரான ஜேன் மன்சுன் வாங், ஆண்ட்ராய்ட் ஃபேஸ்புக் ஆப்பில், லைக் எண்ணிக்கையை மறைக்கும் வேலைகளில் இறங்கியிருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து பிரபல டெக் நிறுவனமான டெக் க்ரன்ச் பேஸ்புக் நிறுவனத்திடன் விசாரித்த போது, லைக் எண்ணிக்கையை மறைப்பதற்கான சோதனைகளை செய்துவருவதை ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த நடைமுறை இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதை தெரிவித்துள்ளது. இன்ஸ்டாக்ராமில் இந்த சோதனை ஓட்டத்தை ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட 7 நாடுகளில் சோதனை செய்து பார்த்து வருகிறது. ஆனால் அந்த சோதனை ஓட்டத்தின் முடிவை வெளியிட பேஸ்புக் நிறுவனம் மறுத்துவிட்டது.
இந்த சோதனையை ஃபேஸ்புக்கில் செய்து பார்க்கும்போது அதை படிப்படியாக நடைமுறைப்படுத்தும். இந்த சோதனையில் பயனாளர்களிடம் பேஸ்புக் பயன்பாடு அல்லது விளம்பர வருவாயை கணிசமாக பாதிக்கிறதென்றால் இதிலிருந்து பின்வாங்கக்கூடும் என்று தெரிகிறது.
இந்த சோதனை முயற்சி இன்ஸ்டாகிராமில் சாதகமாக வந்திருப்பதாகவே அறியப்பட்டுள்ளது. கனடாவில் முதலில் தொடங்கப்பட்ட இந்த சோதனை படிப்படியாக பிரேசில், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஜூலை மாதம் முதல் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. இதில், போஸ்ட் செய்திருப்பவர் தனக்கு எத்தனை லைக் கிடைத்திருக்கிறது என்பதை காணலாம். ஆனால் மற்ற பயனாளர்கள் அந்த பதிவுக்கு எத்தனை லைக் கிடைத்திருக்கிறது என்பதை காண முடியாது. பதிலாக, இருவர் நட்புவட்டத்தில் இருக்கும் பொதுவான சில நண்பர்களின் லைக்குகளை மட்டும் காட்டும்.
இன்ஸ்டாக்ராம் சோதனையைத் தொடந்து அதை ஃபேஸ்புக் ஆப்பில் விரிவுபடுத்தும்போது, இதிலும் நேர்மறையான முடிவுகளே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் மட்டுமல்லாமல், தினசரி நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள பல பயனாளர்கள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சேட் என்று சென்று விட்ட நிலையில், திருமணம், பணியிடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பகட்டான வாழ்க்கை முறைகளை ஷேர் செய்வதற்காக மட்டும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
பிரச்சனை என்னவென்றால், அந்த பெரிய தருணங்கள் மக்களுக்கு மிகக் குறைவாகவே நடைபெறுகிறது. இது போன்ற தருணங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எனவே மற்ற பயனாளர்கள், அவர்கள் நண்பர்கள் வாழ்வில் நடந்த பெரிய தருணங்களுக்கு கிடைத்த அதிகப்படியான லைக்குகளை, தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுபார்த்துக் கொள்கின்றனர் என்று கூறுகிறது ஃபேஸ்புக். இவைகள் எல்லாம் பேஸ்புக்கில் விளம்பரக் காட்சிகளுக்கு சிக்கலானவை என்று கருதுகிறது. எனவே “அவர்கள் எத்தனை லைக்குகளைப் பெறுகிறார்கள் என்று பாருங்கள். அவர்களை ஒப்பிடுகையில் என் வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது”, “என்னைவிட மோசமான பதிவுகளை இடுகிறார்கள். அவர்களுக்கு அதிக லைக்குகள் கிடைக்கிறது ஆனால் எனக்கு கிடைப்பதில்லை”, “பிரபலமாக இருக்கும் அந்த பெண்ணுக்கு இத்தனை லைக்குகள் கிடைக்கிறது. நான் பிரபலம் இல்லை. எனக்கு அதிக லைக்குகள் கிடைக்காது எனும் போது நான் ஏன் பதிவுகள் இடவேண்டும்” என்ற பயனாளர்களின் எண்ணங்களை தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கருதியதன் விளைவாகவே இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக