Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

செல்லத்தாயும்... அவளின் அப்பாவும்..!

Image result for dad and baby
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



செல்லத்தாய் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றாள். வீட்டுக்கு அருகில் வந்ததும் அவளின் அழுகை ஒரு பாய்ண்ட் கூடியது. அவளுடன் அவள் வகுப்புத் தோழி ராணியும் கூடவே வந்தாள். ராணியின் வீடு பக்கத்து வீடில்ல.. அடுத்து தெருவில் தான் அவளது வீடு இருக்கிறது.. இருந்தாலும் செல்லத்தாய் அழுது கொண்டே வந்ததால் அவள் வீடு வரை சென்றால் தான் ராணிக்கு ஏதோ ஒரு காரியம் செய்த திருப்தி.

செல்லத்தாய் அழுவதற்கு பெரிய காரணம் ஒன்றும் கிடையாது. ஆனால், அவர்களுக்கு அதுதான் பெரிய காரியம். பள்ளிக்கூடத்தில் இன்டர்வெல் பீரியடில் விளையாடும் போது அடித்து விட்டாள் லதா. அவளும் செல்லத்தாயுடன் ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறாள். இவளால் திருப்பி அடிக்க முடியாததால் மற்றவர்களின் கூடுதல் இரக்கத்தையும், ஆதரவையும் பெருவதற்கு அழுகை தான் ஒரு கருவி. அழுகை தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கருவி என்பது பிறந்த குழந்தைக்கே தெரியும் போது செல்லத்தாய்க்குத் தெரியாதா என்ன!.. அவள் அழுகையைப் பள்ளிக்கூடத்திலேயே நிப்பாட்டியிருப்பாள், எரிகிற நெருப்பிலே எண்ணெய்யை ஊற்றுவது போல, வகுப்புத் தோழிகளான ராணியும் மற்றவர்களும் என்னமா அடிச்சிட்டா! லதா, என்று ஆளாளுக்கு எண்ணெய்யை ஊற்ற, செல்லத்தாயும் கொஞ்சம் அழுகையை நீட்டிக்கத்தான் வேண்டியிருந்தது. அதுவும் கூடவே ஆசைக்காக கூட கொஞ்ச நேரம் அழவேண்டியிருந்தது.

நன்றாக மது குடித்துவிட்டு சற்று முன்தான் செல்லத்தாயின் அப்பா காத்தமுத்து வீட்டிற்கு வந்திருந்தார். படிப்பு வாசனையே இல்லாத காத்தமுத்துவுக்கு வேலை, தொழில் என்று சொல்வதற்கு ஒன்னும் இல்லை. ஆனால், அவன் யாரிடம் காசு கேட்டாலும் இல்லை என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால், அவனது தோற்றம் அப்படி. அவனது பொழப்பு ஓடுறதுக்கு யாரையாவது அடிக்க வேண்டும். அப்பொழுதான் அவன் மீது மற்றவர்களுக்கு இருக்கிற பயத்தின் காய்ச்சல் சூடு குறையாமல் இருக்கும். காரணமே இல்லாமல் சண்டை போடுகிறவனுக்கு காரணம் கிடைத்துவிட்டதால் போதும் அவ்வளவுதான், அவனைத் தவிர தெருவில் யாரும் நிற்க மாட்டார்கள்.

காத்தமுத்துவின் சாரம், சட்டை எப்பொழுதும் அழுக்காகதான் இருக்கும். தீபாவளிக்கு புதுச் சாரம் சட்டை எடுத்தாலும் அது அழுக்குக் கலராத்தான் இருக்கும்.

அப்பா வீட்டிற்குள் இருப்பது தெரியாமலேயே செல்லத்தாய் அழுது கொண்டே வாசல் வரை வந்துவிட்டாள்.

மகளின் அழுகையைக் கேட்டதும் ஏந்தாய் அழுகிற? யார் அடிச்சா? சொல்லு, என்று காத்தமுத்து கேட்டான். அப்பாவைப் பார்த்ததும் பயம் தொற்றிக் கொள்ள அப்படியே நின்று விட்டாள். கூடவே வந்த ராணி வந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். செல்லத்தாய பள்ளிக்கூடத்தில வச்சி லதா அடிச்சிட்டாளா, அதான் அழுவுதா.

லதாவா அவ எவடி லதா. என்னத் தைரியம் இருந்தா உன்னைய அடிப்பா. நீ சும்மாவ விட்ட அவள.

லதான்னா முக்கு வீட்டு இட்லிய பாட்டி இருக்காவல்லா, அவுக பேத்தி என்றாள் ராணி. செல்லத்தாய இடது கையில புடிச்சிக்கிட்டு இட்லிப் பாட்டி வீட்டிற்கு சென்றான் காத்தமுத்து. நல்லப் போதையில் இருந்ததால் வேகம் அதிகமாயிருந்தது.

ஏய்! இட்டிலி கிளவி எங்கடி உம் பேத்தி. அவள வெளிய அனுப்புடி. இப்ப அடிக்கச் சொல்லு உம் பேத்திய. அப்படியே அவ கையப் பிச்சி உன் கையில தர்றேன்.

அய்யா காத்தமுத்து என்னய்யா இது. ஏன்யா இப்படி பேசற. ஏன்டி கிளவி என் குழந்தைய அடிக்கிற அளவுக்கு உன் பேத்திக்கு தைரியம் குடுத்திருக்கியோ நாதாரி…. பீப்பீஒலி. காத்தமுத்து பேசின கெட்ட வார்த்தைகளுக்கு பீப் ஒலி கொடுக்க வேண்டும் என்றால்… நான்கு பக்கத்திற்கு பீப் ஒலி தான் கொடுக்க வேண்டும்.

சுத்தி நின்று நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் நின்றனர், காத்தமுத்துவின் பேச்சை.

காத்தமுத்துவின் கெட்ட வார்த்தைகளைக் குழந்தைகள் கேட்டுக்கொண்டு நின்றார்கள் என்பதை விடக் கற்றுக்கொண்டு நின்றார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.

பொறுமையின் எல்லக்கே சென்ற காத்தமுத்து வீட்டிற்குள் நுழைந்து லதாவின் அம்மாவையும் பாட்டியையும் வெளியே இழுத்து வந்தான். வந்த வேகத்தில் இருவரையும் தெருவில் போட்டு அடி அடியென்று அடித்தான். வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் ஏன்? என்று கேட்க துணியவில்லை.

ஐயா! எம் பிள்ளைய மன்னிச்சிருய்யா, சின்ன புள்ள தெரியாம அடிச்சிருக்கும், என்று கையெடுத்துக் கும்பிட்டவாறு கெஞ்சினான் லதாவின் அம்மா.

மனமிரக்கமில்லாத காத்தமுத்து, லதாவின் அம்மா தலை மயிரைப் பிடித்து தரதரவென்று இழுத்து தரையில் மோதினான்.

இதைப்பார்த்து பொறுக்கமுடியாத லதா, அம்மா என்று அவளைக் கட்டி பிடித்து அழ வந்தவளைக் கையில் தூக்கி தரையில்; எரிந்தான் காத்தமுத்து. அலறி துடித்த லதா மயங்கினாள். எதிரியே இல்லாத களத்தில் வீரவசனம் பேசினான் காத்தமுத்து. யாராவது எங்கிட்ட மோதுனிங்க தொலைச்சிடுவேன்.

செல்லத்தாய் பயந்து போய் நின்று கொண்டிருந்தாள். செல்லத்தாயின் அம்மா அதான் காத்தமுத்துவின் மனைவி வேகமாக ஓடி வந்தாள்.

ஏய் பேதில்ல போவான் ஏன் இந்த நிலையிலே நிக்கிற. உன் அகம்பாவத்துக்கு அளவே இல்லையா. சின்னப் பிள்ளையும், பொம்பளைகளையும் போட்டு இப்படி அடிச்சிறுக்க, என்று காத்தமுத்துவின் மனைவி பயத்தோடே கத்திக் கொண்டே வர, அவளுக்கும் ரெண்டு அடி கிடைத்தது. அவள் அடி தாங்க முடியாமல் வீட்டுக்கு ஓட, காத்தமுத்துவும் பின்னாலே ஓட சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.

மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு வந்ததும் முந்தின நாள் நடந்த சண்டை தான் குழந்தைகளின் முக்கிய நிகழ்வாகும். அதுவும் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு அன்றைக்கு நாயகி ராணி தான். அடுத்தப் படியாகத்தான் செல்லத்தாய்.

செல்லதாயின் அப்பா சொன்ன கெட்டவார்த்தைகளைக் குழந்தைகள், அதன் வீரியம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருந்தனர். அது கெட்ட வார்த்தை என்பதை விட குழந்தைகள் கேட்ட வார்த்தை என்பது தான் சரியாக இருக்கும்.

இந்தச் சண்டை விவகாரம் வகுப்பாசிரியை காதுக்கும் எட்டியது.

ஏற்கனவே வகுப்பாசிரியை சுமதி பயந்த சுபாவம் உடையவர். அதுவும் உணர்ச்சி வசப்படுகிறவர். சின்னக் காரியமும் உணர்ச்சி வசத்தால் மிகப் பெரிதாகத் தோன்றும் அவருக்கு.

ஆசிரியை சுமதி மாணவர்களின் வருகையை பதிவு செய்தார். பதிவு முடிந்த உடனேயே ஒரு மாணவன், டீச்சர் நேத்து லதாவின் அம்மாவையும், பாட்டியையும் செல்லத்தாயின் அப்பா அடி அடின்னு அடிச்சி கையை ஒடிச்சிட்டாரே. பெரிய சண்டை நடந்தது.

செல்லத்தாய் தலையை குனிந்தவாறு அமைதியாக இருந்தாள். லதாவோ கண்ணீர் மல்க பாவம் போல இருந்தாள்.

ராணி எழுந்து கையைக் கட்டிக்கொண்டு டீச்சர் செல்லத்தாய யாராவது அடிச்சா அவங்க அப்பா, அவள அடிச்சவங்கள நொத்து நொத்துன்னு நொத்திருவாரே. அவங்க அப்பா கோவக்காரரு. குடிச்சிட்டு வந்து சண்டை போடுவாறு என்றாள்.

சரி.. சரி.. இனிமேல் யாரும் செல்லத்தாய அடிச்சிறாதீங்க. செல்லத்தாயி உன்னை யாரும் எதுவும் சொன்;னால் நீ எங்கிட்டதான் சொல்லனும். உங்க அப்பா கிட்டப் போயி சொல்லக்கூடாது. அதாவது பள்ளிக்கூடத்தில வச்சி எது நடந்தாலும் சரியா?

சரி! என்பது போல் தலையை மட்டும் ஆட்டினாள். முகம் கனத்தும் போய் இருந்தது.

மாணவர்களுக்கு எவ்வாறு பயம் இருந்ததோ அதே மாதிரி ஆசிரியை சுமதிக்கும் செல்லத்தாய் என்றால் மனதில் ஒரு பயம் வந்துவிட்டது. ஒரு மனுசன் வீடு நுழைந்து பெண்களை இழுத்துப் போட்டு அடிக்கிறான்னா! அவன் எப்படிபட்டவனாக இருக்க வேண்டும். நிச்சயமாக அவன் மனுசனாகவே இருக்க முடியாது. மிருகமாகத்தான் இருக்க முடியும். தப்பித்தவறி கூட செல்லத்தாய அடித்து விடக்கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டார்.

குழந்தைகளுக்கு உரித்தான சின்னச் சின்ன சேட்டைகள் செல்லத்தாயிடமும் இருந்தது. குழந்தைகள் சின்னச் சின்ன சேட்டைகள் செய்ய வேண்டும். இல்லையென்றால் குந்தையிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

பள்ளி முடிந்து செல்லத்தாய் வீட்டிற்கு போகும் போது அவளது அப்பா காத்தமுத்து மற்றும் இரண்டு மூன்று பேர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே வந்தாள். அருகில் வந்ததும் ஏய், காத்தமுத்து வீட்டிற்கு வரும்போது எனக்கு பண்டம் வாங்கிட்டு வா. மறக்காம குச்சி மிட்டாய் வாங்கிட்டு வந்திடு என்றவள் காத்தமுத்துவின் பதிலுக்கு காத்திராமல் போய்க்கொண்டேயிருந்தாள்.

ஏம்பா கடைசியா நீ என்னதான் சொல்ற என்றான் காத்தமுத்து, கட்டம் போட்ட சட்டை போட்டிருந்தவனிடம், ஏண்ணே வட்டி எனக்குள்ளது. அப்படியே அனுக்குலையாம வச்சிறுக்கேன். எட்டாயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபா குறைஞ்சாலும் வண்டிய விற்க மாட்டேன்.

காத்தமுத்து அப்படியே வெள்ளைச் சட்டை போட்டவனை பார்த்துக் கேட்டான், நீ என்ன விலைன்னா வண்டிய வாங்குவ.

அண்ணே இது மாடல் ரொம்பப் பழசுண்ணேன். அதனால ஏழாயிரம்ன்னா வாங்கிக்கிறேன். இல்லன்ன வேண்டாம்.

அப்படியெல்லாம் விட்டுற முடியுமா தம்பி வியாபாரம் நடக்கனும்ல்ல. உனக்கோ வண்டியப் புடிச்சிருக்கு. ரெண்டு பேரும் ரொம்ப தூரத்தில் இல்ல ஆயிரம் ரூபாய்தான் வித்தியாசம். அதனால நீ ஐநூறு ரூபாய குறைச்சிகோ, நீ கேட்டதிலிருந்து கூட ஐநூறு கொடுத்திடு என்னப்பா சம்மதமா என்றான் காத்தமுத்து இரண்டு பேரையும் பார்த்து..

எட்டாயிரத்தில ஐநூறு குறைச்சா ஏழாயிரத்து ஐநூறு. அதாவது ஏழரை ஏழரைக்கு சம்மதிக்கலன்னா கடைசில நம்மகிட்ட ஏழரைய இழுத்திடுவான். இந்தக் காத்தமுத்து என்று மனதில் எண்ண தவளையக் குதிக்க விட்டவன், சரிண்ணே நீங்க சொன்னச் சரியாத்தான் இருக்கும் என்று ஒத்துக் கொண்டான்.

வியாபாரம் முடிந்துவிட்டது. நீ ஏழாயிரத்து ஐநூற குடுத்திட்டு வண்டிய ஓட்டிக்கிட்டுப் போ. அதுக்கு முன்னாடி ஆளுக்கு ஐநூற தந்துட்டுப் போங்க. நான் ஒன்னும் சும்மாக் கேக்கலப்பா கமிஷன்தான் கேக்கிறேன்.

வண்டி வாங்கின வெள்ளைச் சட்டை போட்டவன் சொன்னான், ஏண்ணேன் ஐநூறு கமிஷன் அதிகம்ன்ணே அதெல்லாம் தரமுடியாது வேனும்ன்னா இந்த பாருங்கத் தம்பி காத்தமுத்து சொன்னான் வெள்ளைச் சட்டைக்காரனப் பார்த்து, தம்பி உன்கிட்ட அவன் வண்டி என்ன விலை சொன்னாரு, எட்டாயிரம் ரூபா. ஏழாயிரத்து ஐநூறு இன்னொரு ஐநூற குடுங்க. உங்களுக்கு இதில எந்த கஷ்டமும் இல்ல பின்ன ஏன் வருத்தப்படுறீங்க.

வெள்ளைச் சட்டை யோசித்தான். ரூபாய் ஐநூறு கொடுக்கலன்னா இவன் விட மாட்டான் மேலும் பிரச்சனையைத்தான் கிளப்புவான் என்று எண்ணியவன் ஐநூறை எண்ணிக் கொடுத்துவிட்டான்.

அப்புறம் வண்டி விற்ற கட்டம் போட்ட சட்டைகாரன் பக்கம் திரும்பினான். அவன் காத்தமுத்துவைப் பாhத்து ஏண்ணே இப்ப நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும்.

தம்பி அவன் உங்க வண்டியில என்ன விலைக்கு கேட்டான்ம்பிங்க. நான் ஏழாயிரம்ண்ணே என்று சொல்ல, அவன் ஏழாயிரத்து ஐநூறு தந்திருக்கான். அதனால அந்த ஏழாயிரம் போக மீதி ஐநூற கமிஷனாக இங்க தந்திடுன்னு சொல்வீங்க. உங்களுக்கு எதுக்குண்ணே சிரமம். சந்தோமா தாறேன் வச்சிக்கோங்க.

இந்த மாதிரி சர்வீஸ் சார்ஜ் வாங்கித்தான் காத்தமுத்து உடம்பு நோகாமல் உடம்பு வளர்த்தான்.

இந்தாடா என் செல்லம், நீ கேட்ட குச்சி மிட்டாயும், பண்டமும். செல்லத்தாயை இழுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டான்.

தகப்பனும், மகளும் பேசிக் கொண்டு இருப்பதை தாய் பார்த்துக்கொண்டே இருந்தாள். மனதில் எண்ணிக் கொண்டாள், இந்த முரட்டுப் பயலுக்குத்தான் பிள்ளை மேல எவ்வளவு பாசம். அதான் அவளை யாரும் எதுவும் பேசிடவோ, அடிச்சிடவோ கூடாது. பேசிட்டாப் போதும் அம்புட்டுத்தான் எங்கிருந்துதான் கோபம் வருமோ தெரியல. பேய் பிடிச்ச மிருகம் மாதிரிதான் நிப்பான்.

ஆசிரியை சுமதி பயந்த சுபாவமாக இருந்தாலும் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் உள்ளவர். கணித பாடம் நடத்துவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதனால் தினமும் கணித பாடத்தில் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தவறாமல் கொடுத்துவிடுவர்.

வழக்கம் போல் ஆசிரியை சுமதி மாணவர்களின் வீட்டுப்பாட நோட்டைத் திருத்திக் கொண்டிருந்தார். எல்லோரும் வரிசையாக நின்று வீட்டுப்பாட நோட்டைக் காட்டி திருத்திக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர். நாலைந்துக் குழந்தைகள் வழக்கம் போல் வீட்டுப்பாடம் செய்யாமல் நோட்டைக் காட்டாமல் உட்கார்ந்திருந்தனர்.

இதைக் கவனிக்காத சுமதி பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். இது கடைசிப் பீரியட். இப்போ வேகமாக் கணக்கு நடத்தினால்தான் அதிலிருந்து வீட்டுப்பாடம் கொடுக்க முடியும்.

டீச்சர் இங்க ரெண்டு பேர் வீட்டுப்பாட நோட்டைக் காட்டாமல் இருக்காங்களே என்றார் நோட்டைக் காட்டி குட் வாங்கிய மாணவி.

என்னது நோட்டக் காட்டாமல் இருக்கிறார்களா….! யாரது எழுந்திரிங்க என்றதும் நான்கு குழந்தைகள் எழுந்து நின்றனர். ஒரு மாணவியின் நோட்டை வாங்கிப் பார்த்த ஆசிரியைக்கு கோபம் வந்துவிட்டது. மேசையில் இருந்த மர அடிஸ்கேலை எடுத்து இரண்டு அடி கொடுத்தார். அந்தக் கூட்டத்தில செல்லத்தாயும் நின்றாள். செல்லத்தாயின் நோட்டை வாங்கி பார்த்தவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது காரணம் பல நாட்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் ஏமாற்றியது தெரியவந்தது.

எவ்வளவு தைரியம் இருந்தால் இத்தனை நாள் என்னை ஏமாற்றியிருப்பாய். நீ என்னை ஏமாற்றல உன்னையே நீ ஏமாற்றியிருக்கிறாய். மற்ற குழந்தைகளுக்கு அடி விழுந்தது போல் செல்லத்தாய்க்கும் ஸ்கேலால் அடி விழுந்தது. ஏற்கனவே அடி வாங்கிய ராணி அழுது கொண்டே கையைத் தடவிக்கொண்டிருந்தாள்.

செல்லமாய் வளர்ந்த செல்லத்தாய்க்கு டீச்சர் கொடுத்த ஸ்கேல் அடி லேசாக இருந்தாலும், என்னைய டீச்சர் அடிச்சிட்டாங்களே என்கிற மனவலிதான் அதிகமாயிருந்தது. கைவலி நின்றிருந்தாலும் மனவலி நினைத்து நினைத்து அழத் தூண்டியது. அழுதால் மனதுகுள்ளே அழுதாள். நேரமாகிவிட்டதால் வீட்டிற்கு போவதற்கு ஸ்கூல் பெல் அடித்து விட்டது.

சுமதி டீச்சர் லஞ்ச் பேக்கை எடுத்து வைக்கும் போது தான் என்றுமில்லாத, ஏதோ சிறு நெருடல் இருந்தது. ஹோம் ஓர்க் செய்யாதற்காக குழந்தைகளை அடித்ததும், குறிப்பாக செல்லத்தாயை அடித்ததும் மனதிற்குள் ஏதேதோ செய்தது. ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற பயம் லேசாகக் கிளம்பியது. அந்தப்பயம் சிறுக சிறுக வளர்ந்து கொண்டே வந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டே நடந்தாள் செல்லத்தாயி. பக்கத்துவீட்டு ராணி சும்மா இருப்பாளா, அவளும் ஒரு தோழமைக்காக கண்ணைக் கசக்கிக் கொண்டே செல்லத்தாயுடன் நடந்தாள்.

வீட்டிற்கு அருகே வந்ததும் செல்லப்பிள்ளை செல்லத்தாயின் அழுகை அவளை அறியாமலே கூடிவிட்டது.

ராணியின் அம்மா பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்விட்டு வரும் போது ஒரு பெரிய பலாப்பழம் வாங்கி தலையில வைத்துக் கொண்டு நடந்து வருவதைப் பார்த்ததும் அழுகை போன இடம் தெரியாமல் ஐ பலாபழம்! என்று கூச்சலிட்டுக் கொண்டே அம்மாவிடம் ஓடிவிட்டாள்.

பலாபழத்தைப் பார்த்து ராணி ஓடியதைப் பார்த்தும் செல்லத்தாயிக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அதுவரைக் கூட வந்த ராணி இப்போது வீட்டருகே வந்ததும் ஓடிவிட்டாளே என்பதால் ஏற்பட்ட கோபமும் ஆத்திரமும் அவளின் அழுகை கூடுவதற்கு காரணமாயிற்று.

செல்லத்தாய் அழுதுக்கொண்டே வந்தவள் ஸ்கூல் பேக்கை வீட்டிற்குள் தூர எரிந்துவிட்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள். வீட்டிற்குள் இருந்த காத்தமுத்துவுக்கு அதிர்ச்சி. ஏம்மா செல்லம் என்னாச்சி, ஏன் அழற என்றவாறு செல்லத்தாயை அருகில் இழுத்துக் கேட்டான். எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.

பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்ததால் காத்தமுத்துவுக்கு கோபம் அதிகமாகியது. ஏய் செல்லத்தாயி இப்ப சொல்லப் போறிய இல்ல நாலு சாத்து சாத்தவா. எந்தச் செருக்கி அடிச்சா சொல்லு. அவ கால ஒடிச்சி அடுப்புல வச்சிடுறேன். போன வாரம் அடிச்சாளே அந்த இட்லிக்கார கிளவி பேத்தி அவ அடிச்சாளா, இல்ல முண்டக்கன்னி மவ ராணி அடிச்சாளா சொல்லு. சொல்லிட்டு அழு.

இல்லப்பா இட்லிக்காரப் பேத்தியும் அடிக்கல, முண்டக்கன்னி மவ ராணியும் அடிக்கல எங்க டீச்சர் அடிச்சிட்டாங்கப்பா. ம்...ம்...

உங்க டீச்சர் அடிச்சாங்களா எந்த டீச்சர் அடிச்சாங்க, எதுக்கு அடிச்சாங்க. எங்க சுமதி டீச்சர் அடிச்சாங்கப்பா...

சுமதி டீச்சரா… அவ எந்த ஊர்க்காரி, எதுக்கு அடிச்சாங்க.

அவங்க ஊர் தெரியாதுப்பா ஸ்கேல வச்சி அடிச்சிட்டாங்கப்பா...

சரி எதுக்கு அடிச்சாங்கன்னாவது சொல்லு,

கணக்கு வீட்டுப்பாடம் செய்யலப்பா அதுவும் நாலே நாலு நாளுதான் செய்யல.

அப்படியா! வீட்டுப்பாடம் செய்யலன்னா அடிச்சாங்க. சரி! நீ இன்றைக்கு வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிட்டுத் தூங்கு. அப்பா நாளைக்கு ஸ்கூலுக்கு வாறேன். அப்புறம் பாரு. மறுநாள் வழக்கம் போல் பிள்ளைகள் ஸ்கூலுக்கு சாரை சாரையாக வந்துகொண்டிருந்தனர். ஆசிரியை சுமதி பேருந்தை விட்டு இறங்கி ஸ்கூலுக்குள் நடந்து சென்றார்.

என்றுமில்லாதவாறு மனம் கலக்கத்தோடு இருந்தது. ஏதோ விபர்Pதம் நடக்க போவது போல் மனம் சஞ்சலப்பட்டது. முந்தின நாள் இரவில் தூக்கம் இல்லாமல் தவித்ததும், செல்லத்தாயின் அப்பாவைப் பற்றி கேள்விப்பட்டதும் கண் முன் நிழலாடியது.

லஞ்ச் பேக்கை ஓரமாக வைத்துவிட்டு டேபிள் அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார், ஆசிரியை சுமதி. அப்போது வந்த ராணி டீச்சர் நேத்து நீங்க செல்லத்தாயை அடிச்சீங்கல்லா, அதான் அவளுடைய அப்பா வந்திருக்காரு. ஆபிஸ் ரூம் பக்கம் எச்.எம்.சார்கிட்ட என்னதோ பேசிக்கிட்டு இருக்காரு டீச்சர். நீங்க போய் ஒழிஞ்சிக்கோங்க. நான் யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன். டீச்சர் போங்க டீச்சர் போங்க டீச்சர். அந்த ஆளு அடிச்சி கைய ஒடிச்சிருவாரு டீச்சர் பதறினாள் ராணி.

ராணியை விடப் பன்மடங்கு பதற்றமும் நடுக்கமும் சுமதி டீச்சருக்கு. என்ன செய்வதென்று தெரியாமல் டாய்லட் பக்கம் போனவர், உள்ளே போய் நின்று கொண்டார்.

பாம்பை மாதிரி வளர்ந்த தலைமுடியைக் கோதிவிட்டபடி ஒரு கையில் செல்லத்தாயைப் பிடித்துக்கொண்டு வந்தான். குழந்தைகள் எல்லாம் பயந்தபடி தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

சுமதி டீச்சர் எங்க?... சுமதி டீச்சர எங்க? என்று காத்தமுத்து கேட்டுக்கொண்டே பள்ளிக்கு நுழைந்ததும், தலைமை ஆசிரியர் என்ன, என்ன வேணும் என்று கேட்டதற்கும் பதில் சொல்லாமல் வந்தது, மற்ற ஆசிரியர்களுக்கும் சற்று பீதியை கிளப்பியது.

மூன்றாம் வகுப்பு ஆசிரியை சுமதி டீச்சர் கிளாஸ் ரூமிற்குள் ஓடிப் போய் பார்த்தார். அங்கு சுமதி இல்லை. ஆனால் அவருடைய லஞ்ச் பேக் இருந்தது. விபரம் தெரிந்து சுமதி பயந்து எங்கோ ஒழிந்திருப்பது புரிந்தது. சரி சுமதி டீச்சர் இன்னும் வரவில்லை என்று கூறுவோம் என்ற முடிவோடு காத்தமுத்துவிடம் போய் சுமதி டீச்சர் இன்னும் வரவில்லை என்று கூறினார். அருகில் நின்ற ராணியோ டீச்சர் சுமதி டீச்சர் வந்துட்டாங்க. செல்லத்தாயி அப்பா உங்கள அடிக்க கோவமா வந்துருக்காருன்னு சொன்னேன். அதனால அவங்க ஓடிப்போய் கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டாங்க என்றாள்.

ச்சே இந்தக் கக்கூஸ்ல ஒளிஞ்சிக்கிட்டு இருப்பதை விட ஆபிஸ் ரூம் பக்கம் போய்ட்டோம்ன்னா மற்ற டீச்சரிஸ் நம்ம மேல அடி விழாமல்காப்பாற்றுவாங்க என்று எண்ணிய சுமதி வெளியே வந்து ஆபிஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சுமதி டீச்சரைப் பார்த்ததும் குழந்தைகள் டீச்சர் போய் ஒளிஞ்சிக்கோங்க, டீச்சர் போய் ஒளிஞ்சிக்கோங்க அங்க செல்லத்தாயி அப்பா உங்கள அடிக்க நிக்காரு என்றார்கள். பீதியோடே ஆபிஸ் ரூம் படி ஏற, எதிரே காத்தமுத்து ஆபிஸ்ல இருந்து படியிறங்கி வந்தான்.

செல்லத்தாயைக் கையில் பிடித்துக்கொண்டு அழுக்கு மூட்டையாக, பரட்டைத் தலையாக, முரட்டு குடிகாரனாக காட்சியளித்த காத்தமுத்துவை இப்போதுதான் சுமதி டீச்சர் நேரில் பார்க்கிறாள், பார்த்தும் பயந்து நடுங்கினார்.

அப்பாவின் கையை வெடுக்கென்று இழுத்து செல்லத்தாய் சொன்னாள், சுமதி டீச்சர் சுமதி டீச்சர் என்று அப்பாவிடம் சொல்ல காத்தமுத்து செல்லத்தாயின் கையை உதறினான். சுமதி டீச்சர் பதறினார். மயக்கமே வருவது போல் இருந்தது. டீச்சர் கண்ணை மூடிக்கெண்டு தன்னையறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார் காத்தமுத்துவை. சட்டென்று விழித்துப் பார்த்தாள் எதிரில் காத்தமுத்துவைக் காணவில்லை. குனிந்து பார்த்தார். தன் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.

காத்தமுத்து சுமதி டீச்சர் காலில் விழுந்து வணங்கி எழுவதைப் பார்த்த மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் கூட்டமாக கூடினர்.

கைகூப்பியவாறு காத்தமுத்து சுமதி டீச்சரிடம், டீச்சர் என் பிள்ளையும் படிக்க வேண்டும், படிச்சி முன்னேற வேண்டும் என்று நீங்க நினைச்சதுனாலதான, படிக்காம வந்ததுக்கு அடிச்சிறுக்கீங்க. எம் புள்ள மேல பாசம் இல்லாட்டி நீங்க அடிச்சிறுப்பீங்களா. கழுதை எங்கேயும் கெட்டுப் போகுதுன்னு விட்டிருப்பீங்க. நான்தான் படிக்காத முட்டாளா இருக்கேன். எம் புள்ளையாவது நாலு எழுத்து படிச்சி உங்கள மாதிரி வரனும். செல்லத்தாயை பிடித்து டீச்சர் சுமதி கையில் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே திரும்பிப் போனான் நல்ல தகப்பனாக.

எல்லோர் பார்வையிலும் காத்தமுத்து புரியதா புதிராக.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக