Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 செப்டம்பர், 2019

மலிவு விலை: தரமான வடிவமைப்பு: பூம் மைக் கொண்ட கேமிங் இயர்போன் அறிமுகம்.!

Image result for மலிவு விலை: தரமான வடிவமைப்பு: பூம் மைக் கொண்ட கேமிங் இயர்போன் அறிமுகம்.!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை இயர்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இப்போது வரும் இயர்போன்கள் அனைத்தும் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதியில் அடிப்படையில் வெளிவருகிறது.

கிளா நிறுவனம்

அதன்படி மின்னனு உபகரணங்களுக்கு பெயர்போன கிளா நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் அதன் புதிய கேமிங்இயர்போன்களை அறிமுகம் வெய்துள்ளது. குறிப்பாக இந்த கிளா ஜி9 இயர்போன் கேமிங் பிரியர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

10எம்.எம் டிரைவர்கள்

கிளா ஜி9 இயர்போன் 3டி ஸ்டீரியோ சவுண்ட் வழங்கு திறனை கொண்டுள்ளது, பின்பு இதில் 10எம்.எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது. மேலும் கேமிங்கின் போது பிரத்யேக ஆடியோ எஃபெட்களை தனித்துவத்தில் வழங்க இது துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூம் மைக்

மேலும் இந்த சாதனத்தில் பூம் மைக் இடம்பெற்றுள்ளது,குறிப்பாக இது 360 கோணங்களில் சீராக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-லைன் மைக்ரோபோனினை கேமிங் அல்லாத சமயங்களிலும் பயன்படுத்தலாம், பின்பு இந்த இயர்போனில் உள்ளட 1.2எம் கேபிள் ரக்கட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட டி.பி.இ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 3.5எம்.எம் பிளக் 45 கோணங்களில் இருப்பதால் நீண்ட நாள் உழைக்கு எனக் கூறப்படுகிறது.

டூயல் ஃபிளாங் இயர்-டிப்கள்

கிளா ஜி9 இயர்போனில் டூயல் ஃபிளாங் இயர்-டிப்கள் கேமிங்கின் போது வெள்புற சத்தம் இடையூறை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இயர் ஹூக் காதுகளில்
கச்சிதமாக பொருத்திக் கொள்ளும் வகையில் இருக்கின்றது. மற்ற இயர்போன்களை போன்று இந்த ஹெட்போன்களும் பல்வேறு கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது அதைப் பார்ப்போம்.


அழைப்புகளை ஏற்பது/ நிராகரிப்பது

பிளே/பாஸ், அழைப்புகளை ஏற்பது/ நிராகரிப்பது, பாடல்களை மாற்றுவது மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

விலை ரூ.990-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

கிளா ஜி9 இயர்போன் பொதுவாக பிளாக், கிரீன் மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.990-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒரு வருட வாரண்டியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக