செவ்வாய், 10 செப்டம்பர், 2019

விளையாட்டுப் போட்டியின் போது ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில் படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு!

விளையாட்டுப் போட்டியின் போது ஒலிம்பிக் ஜோதி வெடித்ததில் படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


செங்கல்பட்டில் பள்ளி விளையாட்டுப் போட்டியில் ஒலிம்பிக் ஜோதி வெடித்த நிலையில், அதனை ஏந்திச் சென்ற மாணவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இயங்கி வரும் ராமகிருஷ்ணா மடத்திற்கு சொந்தமாக ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா  நடுநிலைப் பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் கடந்த மாதம் 30-ம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன போட்டியின் துவக்கத்தில் ஒலிம்பிக் ஜோதியை விளையாட்டு மைதானத்தை சுற்றி வர ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனை, அடுத்து விக்னேஷ் என்ற மாணவன் ஒலிம்பிக் ஜோதியை எடுத்து ஓடி வந்துகொண்டிருந்தபோது. அந்த ஜோதியில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும்  மண்ணெண்ணெய் கலந்த ஜோதி திடீரென வெடித்தது.


இதில் விக்னேஷ் மார்பு மற்றும் முகம்  பகுதிகளில் பலத்த தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஆனால் ராமகிருஷ்ணா மிஷன் சார்பாக மாணவரின் குடும்பத்தினரை இதுவரை சந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கி விட்டதாக புரளி கிளப்பி அவர்களை மேலும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாக விக்னேஷின் தந்தை  முருகன் கூறுகிறார்.  உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று சக மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்