செவ்வாய், 10 செப்டம்பர், 2019

Google Play எச்சரிக்கை: இந்த 24 ஆப்ஸ்களையும் உடனே UNINSTALL செய்யவும்! ஏனென்றால்?

கண்ணில் தென்பட்ட ஆப்ஸ்களையெல்லாம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதுவொரு (இரண்டாம்) எச்சரிக்கை!இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.comகூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் முப்பதற்கும் மேற்பட்ட மால்வேர் ஆப்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இம்முறை நாங்கள் வலியுறுத்தாமலேயே அதை நீங்கள் UNINSTALL செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

முன்னதாக வெளியான ஒரு அறிக்கையானது, 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 33 பயன்பாடுகளில் புதிய மால்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து இருந்தது. Doctor Web (டாக்டர் வெப்) ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட அந்த ஆப்ஸ்கள் ஆனது "ஆபத்தானது" என்று அடையாளங் கட்டப்பட்டு உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டது (அந்த Dangerous Apps பட்டியலை அறிய இந்த இணைப்புசுட்டியை சொடுக்கவும்)

அதனை தொடர்ந்து தற்போது சிஎஸ்ஐஎஸ் (CSIS) என்று அழைக்கப்படும் ஒரு சுயாதீன சைபர் பாதுகாப்பு சேவை நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கூகுள் பிளே ஸ்டோரில் 24 Android App-களில் தீம்பொருள் (மால்வேர்) இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

இதை விட திகிலான விடயம் என்னவென்றால், இந்த மால்வேர் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் ஆனது மொத்தம் 4.72 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் உள்ளது என்பது தான்!


இந்த 24 ஆப்ஸ்களும் கூகுள் பிளே ஸ்டோரில் காணப்பட்ட புதிய வகை ட்ரோஜனை கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த ட்ரோஜன் ஆனது Joker என்கிற பெயரை சுமந்துள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

"இந்த ட்ரோஜன் விளம்பர வலைத்தளங்களுடனான தொடர்புகளை அமைதியாக உருவகப்படுத்துகிறது, அதன்வழியாக ஒருவரின் எஸ்எம்எஸ் செய்திகள், தொடர்பு பட்டியல் மற்றும் சாதனத் தகவல்களைத் திருடுகிறது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

 இவ்வகை பாதிப்புகளை வழங்கும் 24 ஆப்ஸ்களின் பெயர்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆப்ஸ்கள் (பெரும்பாலும்) ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. எனவே, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதோ அந்த ஆப்ஸ்களின் பட்டியல்:
பீச் கேமரா 4.2 (Beach Camera 4.2)
மினி கேமரா 1.0.2 (Mini Camera 1.0.2)
செர்டெய்ன் வால்பேப்பர் 1.02 (Certain Wallpaper 1.02)
ரிவார்ட் கிளீன் 1.1.6 (Reward Clean 1.1.6)
ஏஜ் ஃபேஸ் 1.1.2 (Age Face 1.1.2)
அல்டர் மெசேஜ் 1.5 (Altar Message 1.5)
சோபை கேமரா 1.0.1(Soby Camera 1.0.1)
டிக்ளேர் மெசேஜ் 10.02 (Declare Message 10.02)
டிஸ்பிளே கேமரா 1.02 (Display Camera 1.02)
ராப்பிட் ஃபேஸ் ஸ்கேனர் 10.02 (Rapid Face Scanner 10.02)லீஃ ப் ஃபேஸ் ஸ்கேனர் 1.0.3 (Leaf Face Scanner 1.0.3)
போர்ட் பிக்சர் எடிட்டிங் 1.1.2 (Board Picture editing 1.1.2)
க்யூட் கேமரா 1.04 (Cute Camera 1.04)
டேஸில் வால்பேப்பர் 1.0.1 (Dazzle Wallpaper 1.0.1)
ஸ்பார்க் வால்பேப்பர் 1.1.11 (Spark Wallpaper 1.1.11)

 
க்ளைமேட் எஸ்எம்எஸ் 3.5 (Climate SMS 3.5)
க்ரேட் விபிஎன் 2.3 (Great VPN 2.0)
ஹூமர் கேமரா 1.1.5 (Humour Camera 1.1.5)
ப்ரிண்ட் பிளான்ட் ஸ்கேன் (Print Plant scan)
அட்வகேட் வால்பேப்பர் 1.1.9 (Advocate Wallpaper 1.1.9)ருட்டி எஸ்எம்எஸ் மோட் (Ruddy SMS Mod)
இக்னைட் க்ளீன் 7.3 (Ignite Clean 7.3)
ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி- செக்யூரிட்டி ஸ்கேன், ஆப் லாக் (Antivirus Security - Security Scan,App Lock)
கொல்லட் ஃபேஸ் ஸ்கேனர் (Collate Face Scanner)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்