Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ரத்தினக் கற்கள் என்றால் என்ன?

Image result for ரத்தினக் கற்கள் என்றால் என்ன? 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு ரத்தினக் கல் உண்டு. அந்த ரத்தினைக் கல்லை அணிவதால் அந்தந்த கிரகத்தின் அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அனுபவத்திலும் இது பற்றிய நிறைய ஆராய்ச்சிகள் வெளி வந்து கொண்டு இருக்கிறது. ரத்தினக் கற்கள் கண்டிப்பாக பிரச்னையை தீர்க்க வல்லது. ஆனால் இதில் ஒரு நிபந்தனை ஒரு நல்ல அனுபவம் மிக்க ஜோதிடர் வழிக்காட்டிய பிறகு தான் அதாவது அவரது (அந்த ஜோதிடரின்) அறிவுரையின் பேரில் தான் ரத்தினக் கல் போட வேண்டும் நீங்கலாக ராசிப் படி ஏதோ ஒரு ரத்தினக் கல்லை வாங்கிப் போட்டால் அது நல்லதல்ல. காரணம் ரத்தினக் கல் கூட பக்க விளைவுகளை தரக் கூடியது. அதற்கு ஆதாரங்கள் நிறைய உண்டு. ஒரு உதாரணம் சொல்கிறேன் கோகினூர் வைரம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
உலகிலேயே அதிர்ஷ்டம் கெட்ட வைரம் இது தான். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது இந்த துர்பாக்கிய வைரம். இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது, மேலும் அவர்கள் இதை போர் நேரத்தில் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பாழ்படுத்தினர்.
  இது இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது. அன்றைய தினத்தில் இருந்து உலகம் முழுவதும் கொடிகட்டிப் பரந்த பிரிட்டன் சாம்ராஜ்யம் சிதறி இன்று ஒரு சிறு தீவாக மட்டுமே பார்க்கப்படுகிறது. முன்னர் முகலாயர்களிடம் சேர்ந்து ஷாஜகானின் மயில் ஆசனத்தை அலங்கரித்த காலம் அவன் தன் சொந்த மகன் அவுரங்கசீப் ஆல் சிறைப்பட்டு இறந்தான். அத்துடன் அவுரங்கசீப் ஆலம்கீர் காலத்தில் இருந்து முகலாய அரசின் வீழ்ச்சி ஆரம்பம் ஆனது.
 1747 இல் நாதிர் ஷா என்ற ஈரானிய அரசன் இதனை கைப்பற்றினான் (முகலாயர்களிடம் இருந்து) சில ஆண்டுகளில் அவன் படுகொலை செய்யப்பட்டான். அவன் சாவு மிக மோசமாக இருந்தது. பின்னர் அந்தக் கல் ஆப்கானிஸ்தானின் அஹ்மத் ஷா அப்தாலியின் கைகளுக்கு வந்தது. சிங்க மராத்தியர்களை பானிபட் போரில் வென்ற அப்தாலி கோஹினூர் வைரம் வந்த பின் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தான். அவனது சொந்த ஊரான ஆப்கானிஸ்தானில் கூட கலவரங்கள் உண்டானது. யாராரோ ஆட்சியை கைப்பற்றி இறுதியில் 1830 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானின் பதவியிறக்கப்பட்ட ஆட்சியாளர் ஷா ஷூஜா, கோஹினூர் வைரத்துடன் தப்பியோடினார்.
பின்னர் அவர் லாஹூர் வந்தடைந்து பஞ்சாப்பின் சீக்கிய மஹாராஜா (அரசன்) ரஞ்ஜித் சிங்கிடம் அதை அளித்தார்; அதற்குப் பதிலாக மகாராஜா ரஞ்ஜித் சிங் ஆப்கானை மீண்டும் வென்று ஷா ஷூஜாவை மீண்டும் அரியணை ஏற்றினார். ஆனால், ரஞ்சித் சிங் கிற்கு பிறகு சீக்கிய சாம்ராஜ்ஜியம் கோஹினூரின் ஆற்றலால் வீழ்ச்சி அடையத் துவங்கியது. இறுதியில் பிரிட்டன் பஞ்சாப்பை கைப்பற்றி இந்த வைரத்தை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். அதில் இருந்து உலகம் முழுவதும் கட்டி ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ்ச்சியை அடைந்தது.
இப்போது பிரிட்டனின் அருங்காட்சியகத்தில் இந்த வைரம் அமைதியாக உள்ளது. இன்னும் எத்தனை சாம்ராஜ்யங்களை வீழ்த்த காத்திருக்கிறதோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக