Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 செப்டம்பர், 2019

`மர்ம பண்ணை வீடு; அறைக்குள் ரத்தக்கறை'- எப்படி இறந்தார் சாமியார் கோவிந்தராஜ்?

 Image result for `மர்ம பண்ணை வீடு; அறைக்குள் ரத்தக்கறை'- எப்படி இறந்தார் சாமியார் கோவிந்தராஜ்?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



திருவள்ளூரை அடுத்த இறையாமங்கலம் பகுதியில் ஒரு ஏக்கர் இடத்தில் மூலிகை பண்ணை அமைத்து அதன் நடுவில் வீடு கட்டி வாழ்ந்து வந்தவர் கோவிந்தராஜ் (45). இவருக்குத் திருமணமாகவில்லை. சித்தவைத்தியம், நாடி ஜோதிடம், யோகா, ஆன்மிகம் என கோவிந்தராஜ் வாழ்ந்துவந்தார். இறையாமங்கலம் ஊரைவிட்டு ஒதுக்குப்புறத்தில் இவரின் பண்ணை அமைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கும் இவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி இரவு கோவிந்தராஜின் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிலிருந்த இளம்பெண் லாவண்யா, கோவிந்தராஜைக் காப்பாற்ற காவல் நிலையத்துக்கும் ஆம்புலன்ஸிக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீஸார் வந்தனர். கோவிந்தராஜை மீட்ட போலீஸார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 80 சதவிகிதம் தீக்காயங்கள் என்பதால் கோவிந்தராஜ், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மப்பேடு போலீஸார் கோவிந்தராஜ் மரணத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் கோவிந்தராஜின் பண்ணை மற்றும் வீடு முழுவதும் கைரேகையைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``கோவிந்தராஜ், சித்த, ஆயுர்வேத தொடர்பாக 5 டிகிரி படித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறையாமங்கலத்துக்கு வந்துள்ளார். ஒரு ஏக்கர் இடத்தை வாங்கிய கோவிந்தராஜ், அதில் மூலிகைச் செடிகளை வளர்த்துவந்துள்ளார். அதன்நடுவில் வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பூஜை, மூலிகை ஆராய்ச்சியிலேயே அவர் ஈடுபட்டுவந்துள்ளார்.
அவரைச் சந்திக்க போனில்தான் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்தபிறகு பண்ணை வீட்டுக்கு வருபவர்களின் குறைகளைத் தீர்க்க கோவிந்தராஜ் வழிசொல்வார். அதற்காக சில பரிகார பூஜைகளையும் செய்வார். கோவிந்தராஜுக்குத் தனிப்பட்ட சிஷியர்கள் என யாரும் இல்லை. தனியாகத்தான் அந்த வீட்டில் வசித்துவந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த லாவண்யா, கோவிந்தராஜைச் சந்திக்க வந்துள்ளார். சம்பவம் நடந்தபோது லாவண்யா இன்னோர் அறையில் இருந்துள்ளார். இதனால் கோவிந்தராஜிக்கு என்ன நடந்தது என்று லாவண்யாவுக்குத் தெரியவில்லை. வீட்டிலிருந்து சத்தம் கேட்டதாக லாவண்யா கூறியுள்ளார். அதைச் சிலர் வெடிகுண்டு எனத் தவறான தகவலைப் பரப்பிவிட்டனர். சம்பவம் நடந்த வீட்டில் வெடிகுண்டு வெடித்ததற்கான அறிகுறிகள் இல்லை. லாவண்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவர் கூறிய தகவலின்படி விசாரணை நடந்துவருகிறது.
கோவிந்தராஜ் இறந்த தகவல் அவரின் அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்ததும் சம்பவ இடத்துக்கு அவர்கள் வந்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு கோவிந்தராஜின் சடலம் பண்ணை வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது" என்றார்.
தடய அறிவியல் நிபுணர்கள் கூறுகையில், ``சாமியார் கோவிந்தராஜின் வீட்டுக்குள் தீப்பிடித்தற்கான அறிகுறிகள் உள்ளன. சுவர்கள், மேற்கூரைகளில் புகை படிந்து காணப்படுகிறது. ஆனால், தீ பிடித்ததற்கான காரணம்தான் தெரியவில்லை.
மேலும் வீட்டைச் சுற்றி ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளன. அதோடு பெயின்ட், வார்னிஷ் டப்பாக்கள் உள்ளன. வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்களில் தீ பரவவில்லை. மேலும் வீட்டுக்குள் ரத்தக்கறைகள் காணப்படுகின்றன. அதற்கான காரணத்தை ஆய்வு நடத்திவருகிறோம். சம்பவம் நடந்தபோது கோவிந்தராஜ் தனியாக இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பண்ணை வீட்டில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் அடிப்படையில் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்" என்றனர்.
ஊரை விட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள பண்ணை வீட்டை அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் `மர்ம பண்ணை வீடே' என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். தற்போது கோவிந்தராஜின் மூலிகை பண்ணை வீடு, போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. விசாரணை முடிவில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிந்தராஜின் அம்மா ஆண்டாளிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது அவர், ``என்னுடைய மகன் குறிப்பிட்ட சில நாள்களில்தான் என்னிடம் பேசுவார். மற்ற நேரங்களில் அவரிடம் பேச முடியாது. வீட்டுக்கும் வரமாட்டார். நான் சென்னையில் வாடகை வீட்டில் தனியாகக் குடியிருந்துவருகிறேன். சிறுவயது முதலே அவர், மூலிகை ஆராய்ச்சி, ஆன்மிகம் என ஆர்வமாக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து தங்கினார். எப்போதாவது என்னைச் சந்திக்க வருவார். அமாவாசைக்கு என்னிடம் போனில் பேசுவார்" என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக