இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஸ்மார்ட்போன்களை
எவ்வளவுதான் விலை கொடுத்து வாங்கினாலும், அதில் ஒரு விஷயம் மட்டும் மாறாத ஒன்றாக
இருக்கும். முன்பக்கம் டிஸ்பிளே, பின்பக்கம் மெயின் கேமரா தவிர்த்து எதுவும்
இருக்காது. கடந்த பத்து வருடங்களை எடுத்துக்கொண்டால் இதுவே ஒரு ஸ்மார்ட்போனுக்கு
மாறாத ஒரு வடிவமைப்பாக இருந்துவந்தது. அதன் பின்னர் சமீபத்தில் அதில் மாற்றம் வர
ஆரம்பித்தது. சில மொபைல்களில் பின்பக்கமும் சிறிய அளவிலான டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருந்தது,
ஃபோல்டபிள் போன்களும் அறிமுகமாகின.
ஆனால்,
அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் அறிமுகமாகியிருக்கிறது ஷியோமியின் மிக்ஸ் ஆல்ஃபா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 108MP கேமரா விரைவில் வரும் என ஷியோமி
அறிவித்திருந்ததே தவிர, அது எந்த போனில் வரும் என்று தெரிவிக்கவில்லை. மேலும்,
மிக்ஸ் ஆல்ஃபாவைப் பற்றிய தகவல்களோ அல்லது படங்களோ இணையத்திலும் வெளியாகவில்லை.
இந்நிலையில்தான் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஷியோமி இவ்வளவு
விரைவாக இப்படி ஒரு போனை அறிமுகப்படுத்தும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
மிக்ஸ் ஆல்ஃபாவில் என்ன ஸ்பெஷல்
ஸ்மார்ட்போன்களின்
வடிவம் பெரிய அளவில் மாற்றம் பெற்று வரும் காலகட்டம் இது. கடந்த சில வருடங்களாக
இருந்துவந்த நாட்ச் டிஸ்பிளே காணாமல் போய் ஃபுல் டிஸ்பிளே போன்கள் வர ஆரம்பித்தன.
அதேபோல சாம்சங்கும், வாவேவும் சமீபத்தில்தான் ஃபோல்டபிள் போனை
உருவாக்கியிருக்கின்றன. இப்படி சில நிறுவனங்கள் ஒருபக்கமாகச் சென்றுகொண்டிருக்க
ஷியோமியிடம் வேறு திட்டம் இருந்தது. அதுதான் மிக்ஸ் ஆல்ஃபா.
மிக்ஸ்
ஆல்ஃபாவில் பெரும்பாலான பகுதிகள் டிஸ்பிளேவாகத்தான் இருக்கின்றன. பின்பக்கமாக
கேமரா இருக்கும் பகுதியில் மட்டும் பட்டையாக ஒரு இடம் இருக்கிறது. அதைத் தவிர்த்து
அனைத்தும் டிஸ்பிளே மயம்தான், அதுவும் கர்வ்டு டிஸ்பிளேவாக இருக்கிறது. பின்பக்கம்
இருக்கும் அந்தப் பகுதியில்தான் மூன்று கேமராக்கள் இருக்கின்றன. மேலும்,
மொபைலுக்குத் தேவைப்படும் ஆண்டெனாக்கள், சில சென்ஸார்கள் அந்தப் பகுதியில்தான்
இருக்கின்றன. இதில் இருக்கும் மூன்று கேமராக்களின் மெயின் கேமராவில், 108MP திறன்
கொண்ட Samsung ISOCELL Bright HMX சென்ஸார் இருக்கிறது. இது சோனியின் 48MP கேமரா
சென்ஸாரான IMX586-ஐ விடவும் நான்கு மடங்கு பெரியது. இரண்டாவதாக 20MP அல்ட்ரா வைடு
கேமரா இருக்கிறது. மூன்றாவது கேமராவில் 12MP டெப்த் சென்ஸார் கொடுக்கப்பட்டுள்ளது.
மெயின் கேமராவில் இருக்கும் 108 MP திறன் கொண்ட சென்ஸார் அதிகபட்சமாக 12032 x 9024
ரெசோல்யூஷனில் படத்தை எடுக்க உதவுகிறது. அப்படி எடுக்கப்படும் ஒரு படத்தின் அளவு
கிட்டத்தட்ட 40 MB அளவுக்கு இருக்கும்.
மொபைலின்
பெரும்பான்மையான பகுதிகள் டிஸ்பிளேதான் என்பதால், அதைச் சாதாரண வகை டிஸ்பிளேவால்
உருவாக்க முடியாது. வளையும் திறன் கொண்ட flexible OLED
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மிக்ஸ் ஆல்ஃபாவில் 7.92 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது.
screen-to-body ratio எனப்படும் டிஸ்பிளேவுக்கும், போனின் மற்ற பகுதிக்கும் இடையே
இருக்கும் விகிதம் 180 சதவிகிதமாக இருக்கிறது. இப்போது வரும் ஃபுல் வியூ டிஸ்பிளே
போன்களில் சராசரியாக 90 சதவிகிதம்தான் இருக்கும். இதை வைத்தே மிக்ஸ் ஆல்ஃபாவில்
இருக்கும் டிஸ்பிளேவின் பரப்பு எவ்வளவு என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
போனில்
இருக்கும் ஃப்ரேம் பகுதி அதாவது டிஸ்பிளேவுக்கு மேலும் கீழும் இருக்கும் பகுதி
டைட்டானியம் அலாய், செராமிக்ஸ் மற்றும் sapphire ஆகியவற்றைப் பயன்படுத்தி
உருவாக்கப்பட்டிருக்கிறது. போனில் எந்த பட்டன்களும் கிடையாது டிஸ்பிளேவில் அதற்கென
இருக்கும் பகுதிகளில் கொடுக்கப்படும் அழுத்தத்துக்கு ஏற்ப அவை இயங்கும். Qualcomm
Snapdragon 855 ப்ளஸ் என்ற பவர்ஃபுல் ப்ராஸசர் இதில் இருக்கிறது. 12 GB ரேம்
மற்றும் 512 GB இன்டர்னல் மெமரியும் இருக்கிறது. 4,050mAh பேட்டரி மற்றும் 40W
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. நெட்வொர்க்
விஷயத்திலும் அப்டேட்டாக இருக்கும் வகையில் 5G வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஃபோல்டபிள்
போனை உருவாக்க சாம்சங் நிறுவனத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது.
அதேபோல ஆல்ஃபாவை வடிவமைக்க ஷியோமிக்கு இரண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. இதற்காக
1000-த்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உழைத்திருக்கிறார்கள். இதற்காக சுமார் 70
மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. முடிவில் எந்த
நிறுவனங்களும் செய்யாத ஒரு விஷயத்தை சாதித்துக் காட்டியிருக்கிறது ஷியோமி.
இந்த
போனின் விலை 19,999 சீன யுவான்களாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய ரூபாய்
மதிப்பில் இரண்டு லட்சத்துக்கு அருகில் வரும். தற்போது கான்செப்ட் போனாக மட்டுமே
அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இதைப் பெரிய எண்ணிக்கையில் தயாரிக்கும் திட்டம்
ஷியோமியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், வரும் டிசம்பர் மாதத்துக்குள்
குறைவான எண்ணிக்கையில் மிக்ஸ் ஆல்ஃபா போன்கள் விற்பனைக்கு வரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக