Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 செப்டம்பர், 2019

சர்ப்ப தோஷங்கள் !

Image result for சர்ப்ப தோஷங்கள் ! 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அனைத்து கிரகங்களும் ராகு - கேதுவுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்ப தோஷமாகும். ஏதேனும் ஒரு கிரகம் வெளியே அமைந்தாலும் அது கால சர்ப்ப தோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு - கேதுக்களைப் பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும்.

அனந்த கால சர்ப்ப தோஷம் :

ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க, மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம். இதை விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் கூறலாம். இவர்கள் பல இடையூறு, கஷ்டங்களுக்குப் பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். எனினும் திருமணக் காலத்தில் சில இடையூறுகள் உண்டாகும்.

சங்கசூட சர்ப்ப தோஷம் :

ராகு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் கூறுவர். முன்கோபியும்கூட, வாழ்க்கை ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருக்கும்.

கடக சர்ப்ப தோஷம் :

ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும். அரசாங்கத் தண்டனை உண்டு. 10-ல் இருக்கும் ராகு இருட்டு சம்பந்தமான தொழிலைக் கொடுப்பர். புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி கெட்டால், சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார்.

குளிகை சர்ப்ப தோஷம் :

ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் கெடும். இழப்புகள், விபத்துகள் நேரும். பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.

வாசுகி சர்ப்ப தோஷம் :

ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும். தொழிலில் பிரச்சனை ஏற்படும். காது மற்றும் இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உருவாகும்.

சங்கல்ப சர்ப்ப தோஷம் :

ராகு 4-ல், கேது 10-ல் இருந்தால் ஜாதகரின் வேலை, தொழில் கெடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும்.

பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 5-ம் வீடு, கேது 11-ஆம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவித் தொல்லை ஏற்படும். மேலும் நண்பர்களால் ஏமாற்றமும், நோய் உண்டானால் குணமடைய தாமதம் ஆகும்.

மகா பத்ம சர்ப்ப தோஷம் :

ராகு 6-ல், கேது 12-ல் இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும். எதிர்காலம் இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும். 6-ம் அதிபதியை பொறுத்து நோய் குணமாகுதலும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும்.

தக்ஷக சர்ப்ப தோஷம் :

கேது லக்னத்தில், ராகு 7-ல் இருந்தால் முன்யோசனையும் யூகம் செய்யும் ஆற்றலும் உடையவர். தன் செல்வத்தை மது, மாதில் இழப்பார். திருமண வாழ்வில் தொல்லை ஏற்படும்.

கார்கோடக சர்ப்ப தோஷம் :

ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். தந்தையின் சொத்து கிடைக்காது. எதிரிகள் அதிகமாக இருப்பர்.

விஷ்தார சர்ப்ப தோஷம் :

ராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். அடிக்கடி பயணம் செய்வார். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.

சேஷநாக சர்ப்ப தோஷம் :

ராகு 12-ல், கேது 6-ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக