Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 செப்டம்பர், 2019

ஈர மணல் விபூதியாக மாறும் அதிசயம்!

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு விடை தெரியாத அதிசயம் சுருளிமலையில் உள்ளது.
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் தான் அமைத்துள்ளனர். ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு!
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர், பாறையாக மாறுகிறது.
எவ்வளவு நாட்கள் நீர் இங்குள்ள பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது, வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும்.
இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகப்பெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக