இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முன்னரே ஆட்டோமொபைல் துறை
உள்ளிட்ட பல துறைகள், படு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பல லட்சம் பேர்
வேலையிழந்து தவித்து வருகின்றனர். ஆனால் தற்போது இதற்கு அடுத்தாற்போல்,
ஆட்டோமொபைல் துறையில் முக்கிய மூலதனமாக இருக்கக் கூடிய ஸ்டீல் துறையும், தற்போது
பாதாளம் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில்
நிலவி வரும் பொருளாதார மந்தம் மற்றும் அமெரிக்கா- சீனாவிடையே நடந்து
கொண்டிருக்கும் வர்த்தக போர், இதனால் பாதிப்படைந்து வரும் உலகப் பொருளாதாரமும்
முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக உள்நாட்டில் ஸ்டீல்
உற்பத்தி, மிக பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு நிறுவனமான ஐ.சி,ஆர்.ஏ (ICRA) ஒர்
அறிக்கையில் கூறியுள்ளது.
ஸ்டீல் தேவை
கடந்த புதன்
கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4 காலாண்டுகளாகவே, ஸ்டீல் துறையின்
இலாப இயக்க வரம்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2019ம் நிதியாண்டின் முதல்
காலாண்டில் இதன் வளர்ச்சி 22.6 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இதுவே நடப்பு
நிதியாண்டின் முதல் காலாண்டில் 18.2 சதவிகிதமாக மட்டுமே வளர்ச்சி இருந்தது
குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் காலாண்டுகளிலும் ஸ்டீல் தேவை குறையும் என்றும்
கருதப்படுகிறது. இதனால் இதன் வளர்ச்சி மேலும் குறையலாம் என்றும் கருதப்படுகிறது.
வரலாறு காணாத சரிவு
அதிலும் கடந்த வாரத்தில் வெளியான, இந்திய
பொருளாதாரத்தை வெளியிடும், ஜி.டி.பி. விகிதம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
வீழ்ச்சி கண்டு, 5 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே நேரத்தில் உற்பத்தி
துறையை சார்ந்துள்ள ஸ்டீல் துறையிலும் வளர்ச்சி குன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் - ஜூலை வரையிலான வளர்ச்சி உள்நாட்டு ஸ்டீல் நுகர்வு 5.7
சதவிகிதமாக மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. இதுவே கடந்த 2019 மற்றும் 2018ம்
நிதியாண்டுகளில் ஸ்டீல் நுகர்வு 7.5 மற்றும் 7.9 சதவிகிதமாக இருந்தது
கவனிக்கதக்கது.
ஸ்டீல் சார்ந்த துறைகள் படு வீழ்ச்சி
இதே போல் ஸ்டீல்
அதிகளவு பயன்படுத்தக் கூடிய உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடம் கட்டும் துறையும் படு
வீழ்ச்சி கண்டுள்ளதையடுத்து, அதே சமயம் பருவமழை மாறுபாடு மற்றும் ஆட்டோமொபைல்
துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியாலும், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்
ஸ்டீல் துறையில் மெதுவான வளர்ச்சியே காணப்படுகிறது. ஆனால் முன்னதாக நடப்பு
நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தேவை சற்று அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஜூன் 2019ல் 6.4 சதவிகிதமாக இருந்த ஸ்டீல் நுகர்வு, ஜூலை 2019ல் 3.5
சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்த குறியீடுகள் மீண்டும் இத்துறை பலவீனமான போக்கை
கொண்டுள்ளதையே காட்டுகிறது.
ஸ்டீல் விலை குறையலாம்
ஸ்டீல் விலை சர்வதேச அளவிலேயே குறையலாம்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும்
ஆசியா உள்ளிட்ட பகுதிகளிலும் நுகர்வு குறைந்துள்ளது. மேலும் சைனீஷ் ஹாட் ரோல்டு
காயில் ஏற்றுமதி வாய்ப்புகளும் கிட்டதட்ட 13 சதவிகிதம் குறைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. இதனால் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் கூட ஸ்டீல்
விலை டன்னுக்கு 462 டாலராக இருந்துள்ளது. ஆனால் இது கடந்த ஜூன் 2017ல் காணப்பட்ட
விலை என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த துறையை பொறுத்த வரை தேவை அதிகரித்தால்
மட்டுமே, விலையில் மாற்றம் இருக்கும் என்றும் ஐ.ஆர்.சி.ஏ கூறியுள்ளது..
ரெட் அலர்ட் கொடுக்கும் இந்தியா ரேட்டிங்ஸ்
இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ஆய்வு நிறுவனம்,
நடப்பு நிதியாண்டிலும் ஸ்டீல் துறை மிக மோசமான நிலையில் இருப்பதாகவே கூறியுள்ளது.
அதிலும் நடப்பு நிதியாண்டில் இத்துறையில் வளர்ச்சி வெறும் 4 சதவிகிதமாக இருக்கும்
என்றும் கணித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் 7 சதவிகிதமாக இருந்தது
குறிப்பிடத்தக்கது. இதனால் இறக்குமதி அதிகரிக்கலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்கும் உள்நாட்டு பொருட்களை
விட, மிக மலிவான விலையில் கிடைக்கும் இறக்குமதி பொருட்களால், இதன் வளர்ச்சி மேலும்
குறையலாம் என்றும், இது மேலும் சிக்கலையே உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
வளர்ச்சி இப்போதைக்கு இல்லை
நுகர்வு தேவை குறைவு, இதனால் விலை குறையும்
என்று கூறப்பட்டாலும், மறுபுறம் இரும்பு உள்ளிட்ட தாது சுரங்கங்களில் நிலவும்
நிலையற்ற தன்மையால், மூலப்பொருட்கள் கிடைப்பது அரிதாகி விட்டால் விலை அடுத்து
வரும் நான்காவது காலாண்டுகளில் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்மறையாக
எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பல மதிப்பீட்டு நிறுவனங்கள் பல எதிர்மறையான
கருத்துகளை வெளியிட்டு வந்தாலும், பெரும்பான்மையான கருத்துகள் ஸ்டீல் துறையில்
வளர்ச்சி இப்போதைக்கு இல்லை என்றே கூறுகின்றன.
மூடிஷ் எதிர்மறையான கருத்து
இந்திய ஸ்டீல் துறையை
பொறுத்தவரை அதன் வளர்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்றும் மூடிஸ் நிறுவனமும்
அறிவித்துள்ளது. அதிக உள்ளீட்டு செலவுகள், ஆசிய ஸ்டீல் உற்பத்தியாளர்களின்
இலாபத்தில் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் ஸ்டீல் ஆசியா
கண்டத்திலேயே வலுவாக இருக்கும் என்றும், இது ஸ்டீல் துறையில் மெதுவான வளர்ச்சிக்கு
வழிவகுக்கும் என்றும், இது உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி
கண்டாலும், அதை ஈடு செய்யும் என்றும் கூறியுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக