பழைய ரூ100 - இமயமலை
இந்திய அரசு வெளியிட்ட பழைய ரூ100
நோட்டில் இந்தியாவின் மிக முக்கிய அடையாளமான கஞ்சன்சுங்கா மலையின் பானாரோமிக்
வியூ இடம் பெற்றிருந்தது. இந்த வீயூவை நாம் சிக்கிம் மாநிலத்தில் இருந்து
பார்க்கலாம்
பழைய ரூ 500 - தண்டி ஊர்வலம்
இந்தியாவில்
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500
நோட்டிற்கு பின்னால் தேசப்பிதா காந்தி தண்டி ஊர்வலம் சென்றதன் நினைவாக டில்லியில்
அமைக்கப்பட்ட சிலையின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
ரூ 100 - சிக்கிம்
ஏற்கனவே
நாம் முன்னர் பார்த்தபடி பழைய ரூ100 நோட்டின் பின்புறம் உள்ள கஞ்சன்சுங்கா
மலையின் வேறு கோணம்
புதிய ரூ 50 - ஹம்பி
புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்ட ரூ50 நோட்டின் பின்புறம் கர்நாடகா மாநிலத்தில் இருந்து உலக
புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட ஹம்பி பகுதியின் புகைப்படம்
பொறிக்கப்பட்டுள்ளது.
புதிய ரூ 200 - சஞ்ச்யி ஸ்துபி
புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ200 நோட்டில் மத்திய பிரதேச மாநிலத்தில் சஞ்சி
நகரத்தில் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் கட்டப்பட்ட சஞ்சி ஸ்தூபியின் புகைப்படம்
இடம் பெற்றுள்ளது.
பழைய ரூ 20 - அந்தமான் கடற்கரை
பழைய
ரூ 20 நோட்டில் அந்தமானின் போர்ட் பிளேயர் அருகே உள்ள ஒரு அற்புதமான கடற்கரையின்
தோற்றம் இடம் பெற்றுள்ளது.
பழையய ரூ50 - பாராளுமன்ற கட்டிடம்
பழைய ரூ 50 நோட்டின் பின்புறம்
இந்திய மக்களின் வளர்ச்சியை தீர்மானிக்கும் கட்டடமான இந்திய பாராளுமன்ற
கட்டடத்தின் தோற்றம் இடம் பெற்றுள்ளது.
ரூ 500 - செங்கோட்டை
புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்ட ரூ 500 நோட்டின் பின்புறம் டில்லியில் உள்ள செங்கோட்டையின்
தோற்றம் இடம் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக