இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காய்கறிகளும் பழங்களும் 41%
வரை வீண் செய்யப்படுகிறது - உணவு மற்றும் விவசாயத்திற்கான ஐ.நா. அங்கம்
Global food wastage costing global economy
940 billion dollars : வேர்ல்ட் ரீசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் (World Resources
Institute) ராக்ஃபெல்லர் ஃபவுண்டேசன் (Rockefeller Foundation) என்ற அமைப்புடன்
இணைந்து உலக அளவில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது. உலகின் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு உணவு
வீணாக்கப்படுகிறது என்று அந்த ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் நமக்கு
ஏற்படும் இழப்பானது 940 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Global
food wastage costing global economy 940 billion dollars
இந்த உணவுகளால் வெளியாகும் பசுமையக வாயுக்களின்
அளவு, உலக அளவில் வெளியிடப்படும், பூமியை வெப்பப்படுத்தும் பசுமையக வாயுக்களில்
8%-பங்கினைப் பெறுகிறது. இதனால் உணவுப் பொருட்களை வீண் செய்யாமல் பயன்படுத்துவது
முக்கியமானது என்று எச்சரிக்கை செய்துள்ளது இந்த அறிக்கை. உலக நாடுகள், அரசியல்
தலைவர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த
பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று க்ளோபல் ஆக்சன் அஜெண்டா அறிவித்துள்ளது.
உலக நாடுகள் உணவு கொள்முதல் மற்றும் வீண்
செய்தல் குறித்த முறையான அறிக்கை தயாரித்தல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்
ஒன்றிணைந்து இதனை தடுக்கும் வழிமுறைகளை கண்டறிதல், விநியோகர்களுக்கான தொடர்
சங்கலியை உருவாக்குதல், மிகச் சிறிய நிறுவனங்களின் இழப்பீடுகளை சரி செய்தல்,
மற்றும் நுகர்வோர்கள் தரப்பில் ஏற்படும் இழப்பீடுகளை குறைத்தல் ஆகியவற்றை
படிப்படியாக செயல்முறைப்படுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை உலக நாடுகளுக்கு
அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த வருவாய் பெரும் நாடுகளில் உணவுப்
பொருட்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் வீணடிக்கப்படுகிறது. அதிக வருவாய் பெரும்
நாடுகளில் அதிக அளவு உணவுகள் சாப்பிடப்படாமல் வீணடிக்கப்படுகிறது என்று பல்வேறு
ஆராய்ச்சி அறிக்கைகள் நமக்கு தகவல் தருகின்றன.
உணவு மற்றும் விவசாயத்திற்கான ஐக்கிய நாடுகள்
சபையின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி, வேரில் இருந்து உருவாகும் உணவுகள்
மற்றும் கிழங்குகள் தான் உலக அளவில் அதிகமாக (62%) வீணடிக்கப்படுகிறது என்றும்,
அதனைத் தொடர்ந்து காய்கறிகளும் பழங்களும் 41% வரை வீண் செய்யப்படுகிறது என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. எடைக் கணக்கில் பார்க்கும் போது உலக அளவில் காய்கறிகளும்
பழங்களும் தான் அதிக அளவில் வீணாக்கப்படுகிறது என்று அந்த அறிக்கை அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக