இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சென்னையில் இப்படியுமா நடக்குது? பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்ற தாய், மகன்!
சென்னை நெற்குன்றம் அடுத்த அண்ணம்மால்
நகரில் இருந்து போலீசாருக்கு சில புகார்கள் வந்துள்ளன. அதாவது, எங்கள் வீடுகளுக்கு
அருகே சந்தேகப்படும் வகையிலான நபர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் அவர்கள் அதிகம் சத்தம் போடுகின்றனர். அவர்களில் சீருடை அணிந்த பள்ளி மாணவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க குறிப்பிட்ட பகுதியில் உள்ள சில வீடுகளில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் 1 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இதுதொடர்பாக ராஜேஸ்வரி(58), அவரது மகன் பாலமுருகன்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றிய விசாரணையில், கைதான இருவரும் மெரினா கடற்கரை அருகே உள்ள சத்யா நகரில் இருந்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மலிவு விலைக்கு வாங்கியுள்ளனர்.
இந்த மூட்டைகளை அதிகாலை வேளையில் போலீசார் நடமாட்டம் இல்லாத சூழலில், வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு அவர்களின் வீட்டிற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை பார்ட்டி என்ற பெயரில் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்துள்ளனர். இதற்காக மாணவர்களிடம் இருந்து ரூ.100, ரூ.200 என்ற அளவில் கட்டணம் வசூல் செய்துள்ளனர்.
குறைந்த விலை என்பதால், மாணவர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக