இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நீங்கள்
புதியதாக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், அதற்கான உரிய
அங்கீகாரம் (Verified) பெற்றால் மட்டுமே சில முக்கிய அம்சங்களை பயன்படுத்த
முடியும். அதை எப்படி செய்வது என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிக்கிறோம்.
நீங்கள் தகுதியீடையவரா?
நீங்கள்
யூடியூப்பில் உள்நுழைந்தவுடன் வலதுபுற மூலையில் அதன் சுயவிவர லோகோவை (Profile
Logo) பார்க்க முடியும். அதை சொடுக்குவதன் மூலம் அமைப்புகள்(செட்டிங்ஸ்)
பக்கத்திற்கு செல்லாம். அங்கு "கூடுதல் அம்சங்களை பார்வையிட"
("view additional features" ) எனும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம்,
யூடியூப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் காண்பிக்கப்படும் மற்றும் அவற்றை அணுக
நீங்கள் தகுதியீடையவரா என்பதும் தெரிவிக்கப்படும்.
வெரிஃபை
(Verify) செய்யவேண்டும் மேலே உள்ள வீடியோவில் காண்பிப்பது போன்று, தற்போது இந்த
பரிசோதனை சேனலில் கஸ்டம் தம்ப்னைல் போன்ற அம்சங்களை அணுக முடியாது. ஆனால்
பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் இந்த கருவிகளை பயன்படுத்த மொத்த பார்வைகளின்
எண்ணிக்கை, சந்தாதாரர் எண்ணிக்கை அல்லது பார்வையிட்ட நேரம் போன்ற தேவைகள் இல்லை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களது
யூடியூப் சேனலை வெரிஃபை (Verify) செய்ரவேண்டும். அதன் பின்னர் இதே திரையில்
அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும்.
மெசேஜ் வாயிலாக சரிபார்ப்பு
மேற்புறம் உங்கள் ப்ரொப்பைல் லோகோ மற்றும் சேனல்
பெயருக்கு அடுத்து, நீங்கள் ஒரு நீல நிற "வெரிஃபை" பொத்தானை காணலாம்.
செயல்முறையை தொடங்குவதற்கு அதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் யூடியூப் கணக்கை
சரிபார்க்க, நீங்கள் திரையில் தேர்வுசெய்ததற்கு ஏற்ப ஆட்டோமேடேட் வாய்ஸ் அல்லது
டெக்ஸ்ட் மெசேஜ் வாயிலாக சரிபார்ப்பு குறியீட்டு எண்-ஐ உங்களது தொலைபேசி
எண்ணிற்கு கூகுள் அனுப்பும்..
வருடத்திற்கு
ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி இரண்டு யூடியூப் கணக்குகளை மட்டுமே நீங்கள்
சரிபார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1000 சந்தாதாரர்கள் வைத்திருக்க வேண்டும்
தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து சமர்பித்தவுடன்
திரையில் சரிபார்ப்பு குறியீட்டு எண்ணிற்கான முறையை தேர்வுசெய்ய கேட்கும். எந்த
முறையை தேர்ந்தெடுத்தாலும் உடனடியாக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு அது வந்துசேரும்.
அதில் வரும் 6
இலக்க குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து சமர்பித்தவுடன், உங்களது கணக்கு
சரிபார்க்கப்பட்டு வீடியோவில் கஸ்டம் தம்ப்னைல் சேர்ப்பது போன்ற முக்கிய
கருவிகளுக்கு அணுகல் கிடைக்கும்.
யூடியூப்
கணக்கை வெரிப்பை செய்வதன் மூலம் யூடியூப் கஸ்டம் தம்ப்னைல் வசதி மட்டுமே
கிடைக்காது. அத்துடன் 15நிமிடத்திற்கும் அதிகமான நீளமுள்ள வீடியோக்களை பதிவேற்றம்
செய்தல், கணினியில் உங்கள் கணக்கிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்தல் போன்ற
அம்சங்களும் சேர்ந்து கிடைக்கும்.
மொபைலில் நேரடி ஒளிபரப்பு செய்ய குறைந்தபட்சம்
1000 சந்தாதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.
பணம் சம்பாதித்தல், விற்பனை மேலும் கஸ்டம் யூ.ஆர்.எல்,
பணம் சம்பாதித்தல், விற்பனை போன்ற பல்வேறு
முக்கிய அம்சங்களையும் பெறமுடியும். கீழே உள்ள வீடியோவை பார்ப்பதன் மூலம்
அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். இதன்மூலம் கிடைக்கும் கஸ்டம் தம்ப்னைல் போன்ற
முக்கிய அம்சங்கள் வெற்றிகரமான யூடியூப் சேனலுக்கு அடித்தளமாக இருக்கும்.
அதை தற்போதே
செய்யாமலிருக்க வேறொரு காரணமும் இல்லை. யூடியூப்பில் அதிக வியூஸ் பெற வேண்டுமா?
உங்களது யூடியூப் சேனலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துசெல்ல வேண்டுமென்றால் vidIQ-ஐ
கண்டிப்பாக பதிவிறக்கம் செய்யுங்கள். யூடியூப்-ஐ ஆராய, வீடியோக்களை பகுப்பாய்வு
செய்ய, உங்கள் சொந்த சேனலை தணிக்கை செய்ய,பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க இது
உதவியாக இருக்கும். இதை நிறுவ இங்கே கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக