
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தூத்துக்குடி
மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு காட்டு விலங்கு உய்விடம்தான் வல்லநாடு வெளிமான்
காப்பகம். இது திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
பல ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த
சரணாலயம் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரணாலயம் வெளிமான்களால் பிரபலமடைந்தது.
வெளிமான்கள் என்பவை ஆடு போன்ற தோற்றமளிக்கும் மான்கள்.
தமிழகத்தின் தென்கோடியில், வெளிமான்களுக்கு என
பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சரணாலயம்தான் இது. மேலும் இது, தூத்துக்குடி
மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
இந்த சரணாலயம் அமைந்துள்ள இடம் புதர் காடுகளை
உடையது. ஆதலால் மிக கனமுடைய மரங்களை இங்கு காணலாம்.
மான்களை பாதுகாப்பதற்காக இந்த பகுதி முழுவதும்
வனத்துறையால் வேலி அடைத்து பாதுகாப்பாக உள்ளது. மலைப்பகுதியில் மான்கள் மேய்வதை
இங்கு காணமுடியும்.
பெரும்பாலும் இந்த மான்கள் சமமான
நிலப்பரப்புகளிலேயே வாழும், ஆனால் காலநிலை மாற்றங்களால் தற்போது காடுகளில்
வசிக்கின்றன.
இங்கு
வெளிமான்களை தவிர புள்ளி மான்கள், மிளா, குள்ளநரி, காட்டுப்பன்றி, காட்டுப்பூனை,
முயல்கள், கீரி, பாம்பினங்கள், தேள் வகைகள் காணப்படுகின்றன.
மேலும், மயில், குயில், கழுகு, பருந்து, மரகத
புறா, நாரை, மரங்கொத்தி போன்ற பல பறவையினங்களும் வாழ்ந்து வருகின்றன.
குடைசீத்த மரங்கள் (யுஉயஉயை pடயnகைசழளெ) கொண்ட
இலையுதிர் மற்றும் புதர் காட்டு வகை வாழிடத்தைக் கொண்டது இச்சரணாலயம்.
இந்தியாவின்
பல இடங்களில் வெளிமான்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில், வல்லநாடு
சரணாலயத்தில் இவற்றின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து கொண்டே வருகிறது.
எப்படி செல்வது?
திருநெல்வேலி,
தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து வல்லநாட்டிற்கு பேருந்து வசதிகள் உள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
தூத்துக்குடியில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக